மோசடி வெற்றிகளைத் தடுக்க மீண்டும் வாக்குச்சீட்டு வேண்டும் – பிரேமலதா கோரிக்கை

தேமுதிக பொதுச்செயலாளரும்,விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினருமான பிரேமலதா கடலூரில் நேற்று செய்தியாளர்களிடம் பேசினார்.அப்போது அவர் கூறியதாவது….

முதல்வர் தேர்தல் வாக்குறுதியில் அறிவித்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்ற வேண்டும். அரசு போக்குவரத்துக் கழகம் கடனில் உள்ளது. அனைத்துப் பேருந்துகளிலும் இலவசம் என்று கொண்டு வந்த திட்டம், தனியார் பேருந்து உரிமையாளர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.குறிப்பிட்ட பேருந்துகளுக்கு மட்டும் இலவசப் பயணம் என்று அறிவிக்க வேண்டும்.

கடலூர் மாவட்டத்தில் நிலம் கையகப்படுத்தும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும். இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்றுள்ளது. மக்களின் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு. அதை நான் வரவேற்கிறேன்.

இந்தியாவில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை தடை செய்யவேண்டும்.அதில் முறைகேடுகள் நடப்பதாக பல தரப்பட்ட அரசியல் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.இந்தியாவில் தேர்தல் துறை மீண்டும் வாக்குச்சீட்டு முறையை பின்பற்ற வேண்டும். இந்தமுறையைப் பின்பற்றினால் முறைகேடுகள் நடைபெறுவதை முழுமையாகத் தடுக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மதுராந்தகம்,தாராபுரம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் தவெக வெற்றி பெற்றிருக்கும் சூழலில் பிரேமலதா இவ்வாறு கூறியிருப்பது கவனம் ஈர்த்துள்ளது.

Leave a Response