டெல்லியை கதிகலங்க வைத்திருக்கும் கரப்பான்பூச்சி கட்சி

நீட் வினாத்​தாள் கசிவைக் கண்​டித்து கரப்பான்பூச்சி கட்சி சார்​பில் கடந்த ஜூன்,ஜூலை​யில் டெல்லி
ஜந்​தர் மந்​தரில் மிகப்​பெரிய போராட்​டம் நடத்​தப்​பட்​டது.இதன்​காரண​மாக ஒன்றிய கல்வியமைச்​சர் பதவியிலிருந்து தர்​மேந்​திர பிர​தான் வில​கி​னார்.

இப்போது,எஸ்​ஐஆர் சிக்கல் தொடர்​பாக தலை​மைத் தேர்​தல் ஆணை​யர் ஞானேஷ்கு​மார் பதவி விலகவேண்​டும். இல்​லை​யென்​றால் அக்டோபர் 10 ஆம் தேதி முதல் டெல்​லி​யில் கால​வரையற்ற போராட்டம் தொடங்​கப்​படும் என்று சிஜேபி அறி​வித்​தது.

இதைத்தொடர்ந்து டெல்​லி​யில் பலத்த பாது​காப்பு ஏற்​பாடு​கள் செய்​யப்​பட்டு உள்​ளன.டெல்லி காவல்துறையைச் சேர்ந்த 15,000 காவல்துறையினரும்,ஒன்றிய பாது​காப்​புப் படைகளைச் சேர்ந்த 23,000 வீரர்​களும்
குவிக்​கப்​பட்டுள்​ளனர்.ஒட்​டுமொத்​த​மாக 38,000 வீரர்​கள் டெல்​லி​யில் பாது​காப்​புப் பணி​யில் ஈடு​பட்டுள்​ளனர்.
நாட்​டின் பல்​வேறு பகு​தி​களில் இருந்து டெல்​லிக்கு இயக்​கப்​படும் 13 விரைவு தொடர்வண்டிகள் இரத்து
செய்​யப்​பட்டு உள்​ளன.

கிழக்கு தொடர்வண்டி நிர்​வாக​மும் சில விரைவு வண்டி​களை இரத்து செய்​திருக்​கிறது.வெளி​மாநிலங்​களில் இருந்து டெல்​லிக்கு வரும் பேருந்​துகள் தீவிர​மாகக் கண்​காணிக்​கப்​படு​கின்​றன.டெல்லி மற்றும் புறநகர்ப்பகுதி விடு​தி​​களில் தங்​கி​யிருப்​போர் குறித்து விசா​ரணை நடத்​தப்​படு​கிறது.டெல்​லியை ஒட்​டிய அண்டை மாநிலங்​களின் எல்​லைகளில் தீவிர சோதனை நடத்தப்படு​கிறது. டெல்​லி​யின் 57 மெட்ரோ நிலை​யங்​கள் இன்று முழு​மை​யாக மூடப்​படும் என்று அறிவிக்​கப்​பட்​டது.

போராட்​டத்​தில் பங்​கேற்​கும் சிஜேபி தொண்​டர்​களை தடுப்புக் காவலில் வைக்க திருமண மண்​டபங்​கள்,
மைதானங்​கள் தயார் நிலை​யில் வைக்​கப்​பட்டுள்​ளன. முன்​வரிசை பாது​காப்புப் பணியில் ஈடு​படும் காவல்துறையினரின் உடைகளில் ஒளிப்பதிவுக்கருவி பொருத்தப்​பட்டிருக்​கிறது. சிஜேபி அமைப்​பின் 10,000 நிர்வாகிகள் தடுப்புக் காவலில் வைக்​கப்​பட்டுள்​ளனர்.

டெல்லி காவல்துறை இணை ஆணை​யர் நுபுர் பிர​சாத் நேற்று கூறும்​போது,போ​ராட்​டம் நடத்த 10 நாட்​களுக்கு முன்பே மனு அளிக்கவேண்​டும்.ஆனால் மிக குறுகிய காலத்​தில் சிஜேபி மனு அளித்​திருக்​கிறது.சட்​டம்,ஒழுங்கு காரண​மாக போராட்​டம் நடத்த அனு​மதி வழங்​கப்​பட​வில்​லை என்று தெரி​வித்​தார்.

டெல்​லி​யில் நில​வும் அசா​தாரண சூழல் காரண​மாக பள்​ளி, கல்லூரி​களில் இன்று இணைய வாயி​லாக வகுப்​பு​கள் நடத்தப்படும் என்று பெரும்​பாலான கல்வி நிறு​வனங்​கள் அறிவித்துள்​ளன.ஜந்​தர் மந்​தரின் பல்​வேறு பகு​தி​களில் ஒலிபெருக்​கி​கள் அமைக்​கப்​பட்டு உள்​ளன.இந்த வளாகத்தில் யாரும்​ ஒன்​றுகூட வேண்​டாம்​ என்​று ஒலிபெருக்​கி​கள்​ மூலம்​ தொடர்ச்​சி​யாக அறி​விப்​பு வெளியிடப்​படுகிறது.

இதனால் ஒட்டுமொத்த டெல்லியிலும் பெரும் பரபரப்பு நிலவிவருகிறது.

Leave a Response