தேமுதிகவின் பத்து வேட்பாளர்கள் – விவரம்

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்காக அமைக்கப்பட்டிருக்கும் திமுக கூட்டணியில் தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

அந்த பத்துத் தொகுதிகளின் பட்டியல் ஏற்கெனவே வெளியான நிலையில் நேற்று அந்தப் பத்துத் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை பொதுச்செயலாளர் பிரேமலதா வெளியிட்டுள்ளார்.

அதன் விவரம் பின்வருமாறு….

1.விருத்தாசலம் – பிரேமலதா,
2.தர்மபுரி – இளங்கோவன்,
3.சேலம் மேற்கு – அழாகபுரம் மோகன்ராஜ்,
4.விருதுநகர் – விஜய பிரபாகர்,
5.ஓமலூர் – இளங்கோவன்,
6.மைலம் – வெங்கடேசன்,
7.பல்லாவரம் – அனகை முருகேசன்,
8.திருத்தணி – கிருஷ்ண மூர்த்தி,
9.குடியாத்தம் (தனி) – பிரதாப்,
10.போளூர் – சரவணன்

ஆகியோர் போட்டியிட உள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் 2006 ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டு வென்ற தொகுதி விருத்தாசலம்.அதனால் அவரது மறைவிற்குப் பிறகு விருத்தாசலம் தொகுதியில் போட்டியிடுகிறார் பிரேமலதா. அதேபோல், 2024 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தேமுதிக சார்பில் அக்கட்சியின் இளைஞரணி செயலாளரும், விஜய்காந்த் மகனுமான விஜயபிரபாகர் விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டார். அந்தத் தேர்தலில் தமிழ்நாட்டிலேயே குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் அவர் தோல்வியைத் தழுவினார். இந்த நிலையில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் அவர் விருதுநகர் சட்டமன்றத் தொகுதியில் களம் காண்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Response