
தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் தமிழ்நாடு நாள் விழா நேற்று சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் நடந்தது.
விழாவில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கலந்துகொண்டு பேசியதாவது….
தமிழால்தான் நாம் பயன் அடைகிறோம்.நாம் இன்று அமைச்சர் ஆனதற்கு காரணம் தமிழ் மொழி.எத்தனையோ மாநிலங்களில் அந்தந்த மாநிலத்துக்கு என்று கொடி இருக்கிறது.நமது மாநிலத்துக்கு தமிழை முதன்மைப்படுத்தி ஒரு கொடியை உருவாக்கவேண்டும்.
அதை நவம்பர் 1 மற்றும் ஜூலை 18 ஆம் தேதி நமது முதல்வர் கையால் முதன்முறையாக ஏற்றவேண்டும். நவம்பர் 1 ஆம்தேதி போராட்டங்கள் மூலம் நமது எல்லை உருவாக்கப்பட்டுள்ளது.அந்த அடிப்படை இல்லாமல் ஜூலை 18 இல்லை.அந்த வரலாற்றினால் தான் நவம்பர் 1 ஆம் தேதியை தமிழ்நாடு நாள் என்று கொண்டாடுகிறோம்.ஜூலை 18 ஆம் தேதியையும் தமிழ்நாடு நாள் என்று கொண்டாட வேண்டும்.இந்தப் புரிதலை உருவாக்குவதற்கான அரசியல் மாற்றம் தேவைப்படுகிறது.நவம்பர் 1 ஆம் தேதியும் விடுமுறை கொடுக்க வேண்டும்.ஜூலை 18 ஆம் தேதியும் விடுமுறை கொடுக்க வேண்டும்.
நவம்பர் 1 மொழிப்போர் தியாகிகள் தங்களது உயிரைக் கொடுத்ததற்காக. ஜூலை 18 அண்ணாவின் தீர்மானம். முதலில் `அ’ போட்டார்கள்.அதன்பின் அண்ணா முடித்து வைத்தார்.அதில் இருந்து முதல்வர் விஜய் வரலாற்றை திருத்தியிருக்கிறார்.மற்றவர்கள் வரலாற்றை மறைக்கப் பார்த்தார்கள்.இப்போது இரண்டு நாட்களையும் கொண்டாடும் புதிய தமிழ்நாடாக மாறியிருக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.


