அடாவடி விஜய்பாலாஜி அதிர்ந்த செங்கோட்டையன் – ஈரோடு பரபரப்பு

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் 03.02.2026 அன்று முதல்வர் ஜோசப் விஜய் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.அவருடைய நிகழ்ச்சி,பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரியில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.கடைசிநேரத்தில் இடமாற்றம் செய்யப்பட்டது.காஞ்சிக்கோயில் சாலையில் உள்ள ஸ்ரீ லஷ்மி நாராயணா மஹால் மண்டபத்தில் நிகழ்ச்சி நடந்தது.

ஏன் இந்த திடீர் மாற்றம்?

கல்லூரியில் வகுப்புகளும் தேர்வுகளும் நடக்கின்ற நேரத்தில் முதல்வரின் நிகழ்ச்சியை நடத்தினால் பாதிப்பு ஏற்படும் என்றும்,வேண்டுமானால் கல்லூரிக்கு விடுமுறை அளிக்கலாம்,அதேநேரம் அன்று நடக்கவிருக்கும் தேர்வை ஒத்திவைக்க வேண்டுமெனில் பல்கலைக்கழக ஒப்புதல் வேண்டும் என்று கல்லூரி தரப்பில் சொல்லப்பட்டதாகவும்,அப்படிச் செய்தால் பெரும் சிக்கலாகிவிடும் என்று அரசுத்தரப்பு பின்வாங்கிவிட்டதாகவும் சொல்லப்படுகிறது.

இதுதான் இடமாற்றத்துக்குக் காரணம் என்று வெளிப்படையாகச் சொல்லப்படுகிறது.

இன்னொருபுறம்,ஈரோடு அமைச்சர் விஜயபாலாஜி,அமைச்சராகப் பொறுப்பேற்றதிலிருந்தே அவருடைய அணுகுமுறைகள் அடாவடியாக இருக்கின்றன என்பது தொழிலதிபர்கள் மற்றும் கல்விநிறுவனங்களின் குற்றச்சாட்டாக இருக்கிறதாம்.

அவர் மீதான கடும் அதிருப்தி காரணமாகவே,முதல்வர் விஜய்யின் நிகழ்ச்சிக்கு கல்லூரிவளாகத்தைத் தருவதில்லை எனும் திடமுடிவை கல்லூரி நிர்வாகம் எடுத்தது என்று சொல்லப்படுகிற்து.

இந்தத் தகவலை அறிந்த மூத்த அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்,கல்லூரி நிர்வாகத்திடம் சமாதானமாகப் பேசியிருக்கிறார்.அமைச்சர் விஜயபாலாஜி எப்படியெல்லாம் பேசினார் என்பதை எடுத்துச் சொல்லி நிர்வாகத்தினர் அந்த சமாதானத்தை ஏற்கவில்லையாம்.

இதனால்,நம்முடைய மாவட்டத்துக்கு முதல்வர் வரும்போது இப்படி நடக்கிறதே என்று கடும் மனவருத்தமடைந்த செங்கோட்டையன்,சில மணி நேரம் தனித்திருந்து வருந்தியிருக்கிறார்.ஒரு பக்கம் சக அமைச்சரின் அநாகரிக செயல்பாடு,இன்னொரு பக்கம் சொந்த மாவட்டத்தில் அறிவித்த இடத்தை மாற்ற வேண்டியிருக்கிறதே? என்கிற வருத்தம் ஆகியனவற்றால் வேதனையடைந்தார் என்று சொல்கிறார்கள்.

சம்பந்தப்பட்டோருக்கே வெளிச்சம்.

– தங்கம்

Leave a Response