வடசென்னை தாமதமாக உண்மையான காரணம் இதுதான்..!


தனுஷ் தயாரிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த வருடம் தொடங்கப்பட்ட படம் வடசென்னை. லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் தனுஷின் வுண்டர்பார் நிறுவனம் முதல் பிரதி அடிப்படையில் வட சென்னை படத்தை தயாரித்து வருகிறது. வடசென்னை படத்தை ஒரே கட்டமாக எடுக்க திட்டமிட்டனர். ஆனால் கடந்த வரும் படப்பிடிப்பு தொடங்கிய சில நாட்களிலேயே நிறுத்தப்பட்டது.

இதற்கு பலவிதமான காரணங்கள் சொல்லப்பட்டாலும் இப்போதுதான் உண்மையான காரணம் தெரியவந்துள்ளது. ‘விசாரணை படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டதால் அதற்காக தயாராக வேண்டும் என தனுஷிடம் வெற்றிமாறன் கேட்டாராம். தனுஷும் பெருந்தன்மையாக ஒப்புக்கொண்டாராம்.. அந்த தேதிகளை வீணடிக்க வேண்டாம் என்று தான் மற்ற இரண்டு படங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்தாராம் தனுஷ்.. இந்த தகவலை வெற்றிமாறனே தெரிவித்துள்ளார்..

Leave a Response