தனுஷின் கொடி உயர பறக்குமா..?


தனுஷ், முதன்முதலாக இரட்டை வேடங்களில் நடித்துள்ள முழு நீள அரசியல் படம் தான் ‘கொடி’. தனுஷின் தயாரிப்பில் இரண்டு ஹிட் படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் தான் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். த்ரிஷாவுடன் மலையாள நடிகை அனுபமா பரமேஸ்வரன் என்பவரும் கதாநாயகியாக நடித்துள்ளார்.

சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்தப்படத்தை இயக்குனர் வெற்றிமாறன் தயாரித்துள்ளார்.. தீபாவளி ரிலீஸாக வெளியாகவுள்ள இந்தப்படத்தின் பாடல்கள் இன்று வெளியாகியுள்ளன. அதற்கான பத்திரிகையாளர் சந்திப்பில் தனுஷ் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.. இதில் ‘கொடி’ பற்றிய தனது அனுபவங்களை பகிர்ந்துகொண்டார் தனுஷ்..

“நான் நடித்த ‘புதுப்பேட்டை’ உள்ளிட்ட சில திரைப்படங்களில் சிறிய அளவில் அரசியல் இருக்கும். ஆனால் இது முழுக்க முழுக்க அரசியலை பற்றி பேசும் ஒரு படமாக இருக்கும். இந்தப்படம் நான் முதன் முதலில் நடிக்கும் ரெட்டை வேட திரைப்படம். துரை செந்தில் குமார் என்னிடம் கூறும் போது நாம் ரெட்டை வேடத்தில் நடிக்க இதுவே சரியான படமாக இருக்கும் என முடிவு செய்து இப்படத்தில் நடித்தேன்.

இப்படம் அரசியல் பற்றி பேசும் படமா அல்லது அரசியல் பற்றி இளைஞர்களுக்கு கருத்து கூறும் திரைப்படமா என்பதை நீங்கள் திரையில் பார்க்கும் போது உங்களுக்கு புரியும், பிடிக்கும். அதுமட்டுமல்ல இப்படத்தில் 8 வருடமாக ஒன்றாக பணியாற்றிய நண்பர்கள் அனைவரும் இணைந்து பணியாற்றியுள்ளோம்” என கூறினார் தனுஷ்.

Leave a Response