மதுஅருந்துவோரை குழந்தைகள் திருத்தவேண்டும்-மேதாபட்கர் பேச்சு

 

ஈரோட்டில் மதுவிலக்குப் பரப்புரையைத்  தொடங்கிவைக்க வருகைபுரிந்த  நர்மதா பட்சோ அந்தோலன் அமைப்பின்  நிறுவன உறுப்பினர் மேதா பட்கரை கொங்குநாடு ஜனநாயக கட்சியின் நிறுவனத் தலைவர் G.K.நாகராஜ் அவர்கள் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

தமிழ்நாட்டில் 50 ஆண்டுக் காலமாக புறக்கணிக்கப்பட்டு வரும் அத்திக்கடவு-அவினாசி,பாண்டியாறு-புன்னம்புலா,ஆனைமலையாறு – நல்லாறு ஆகிய திட்டங்களையும்,அதனால் கிடைக்கும் பயன்களையும் விரிவாக எடுத்துரைத்தார்.

தமிழகத்தில் மதுவால் ஏற்படும் சாலை விபத்துகளையும் மற்றும் பாலியல் குற்றங்களையும் புள்ளிவிவரத்தோடு எடுத்துரைத்தார்.இதன்பின் தமிழகத்தின் நிலையை தான் முழுமையாக அறிந்துள்ளதாகவும்,பூரண மதுவிலக்கு மற்றும் நீராதார மேம்பாடு ஆகியவற்றுக்கான போராட்டங்களில் தானும் கலந்துகொண்டு தேசிய அளவில் மத்திய அரசின் கவனத்தை ஈர்க்க தான் உதவிட தயாராக இருப்பதாகவும் உறுதியளித்தார்.

அதன்பின்னர் ஈரோடு செங்குந்தர் பள்ளியில் நடைபெற்ற மதுவுக்கெதிரான பிரச்சாரத்தில் கலந்துகொண்டு பேசிய மேத்தா பட்கர் ஒவ்வொரு குழந்தைகளிடமும் தன் குடும்பத்தில் மதுஅருந்துவோர் இருந்தால் அவர்களை திருத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

செங்குந்தர் பள்ளியில் பேசிய G.K.நாகராஜ் அவர்கள் பூரண மதுவிலக்கை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்புகிறார்கள்.தமிழ்நாட்டிலுள்ள நூலகங்களின் எண்ணிக்கையை விட மதுக்கடைகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.பள்ளிக்குழந்தைகள் அனைவரும் தமிழக முதல்வருக்குபூரண மதுவிலக்கு வேண்டி கடிதம் எழுத வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

 

Leave a Response