மீண்டும் ஆர்யா- சந்தானம் – இயக்குனர் ராஜேஷ் கூட்டணி

வெற்றி பெற்ற படங்களின் கூட்டணி மீண்டும் மீண்டும் இணைவது வர்த்தக ரீதியில் மட்டுமின்றி , ரசிகர்களுக்கும் பெரும் மகிழ்ச்சி தரும் செய்தியாகும்.
      ‘பாஸ் என்கிற பாஸ்கரன் ‘ படத்தின் மூலம் ரசிகர்களை பெரிய அளவில் கவர்ந்த ஆர்யா- சந்தானம் – இயக்குனர் ராஜேஷ் கூட்டணி ,ஆர்யாவின் சொந்தப் பட நிறுவனமான ‘தி ஷோ பீபல்‘ என்கிற நிறுவனத்தின் சார்பில் பெயரிடப் படாத புதிய படம் மூலம் மீண்டும் இணைகின்றனர்.
    காதல் நகைசுவை மற்றும் இசைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்க ப்படும் இந்த படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக நடிக்க உள்ளவர் தமன்னா.இவர்கள் இருவரும் ஜோடியாக நடிப்பது இதுவே முதல்முறை.
     இயக்குனர் ராஜேஷின் படங்களில் மையமாக விளங்கும் சந்தானம் இந்தப் படத்திலும் முக்கிய பாத்திரத்தில் நடிக்க உள்ளார்.
‘தாமிரபரணி’ படத்தில் கதாநாயகியாக நடித்த முக்தா பானுவுடன் வெண்ணிற ஆடை முர்த்தி,  ரேணுகா,கருணாகரன்,சித்தார்த் விபின்,வித்யு லேகா, மற்றும் பலர் நடிக்க உள்ளனர்.
நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, ஜாக்கி  கலை வண்ணத்தில், இமான் இசை அமைக்க உள்ள இந்தப் படம் சென்னையில்  நவம்பர் 21 ஆம் நாள் பூசையுடன் துவங்கியது.
‘ இந்தப் படம் வெறுமனே சிரித்து விட்டுப் போகக்  கூடிய படமாக இருக்காது . சிரிப்பதோடு சிந்திக்கவும்  வைக்கும் கதை, கண் கவரும் நேர்த்தியான ஒளிப்பதிவு மற்றும்  செவிக்கினிய இசை என்று படத்தின் வெற்றிக்குத்  தேவையான அத்தனை அம்சங்களும் இந்தப்படத்தில் இருக்கும். ஆர்யா- சந்தானம்- மற்றும் என்னுடைய கூட்டணியில் வெளி வந்த எங்களது முந்தைய படமான ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ படத்தின் வெற்றியையும் தரத்தையும் இந்தப் படத்திலும் தருவோம்’ என்று நம்பிக்கையோடு தெரிவித்தார் இயக்குனர் ராஜேஷ்.

Thanks & Regards

Leave a Response