அமலா நடிக்கும் “உயிர் மெய்” தொடர் நேரம் மாற்றம்

குளோபல் ஒன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் சுந்தர் கே.விஜயன் இயக்கத்தில் அமலா நடிக்கும் “உயிர் மெய்” தொடர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினந்தோறும் 7.00 மணிக்கு ஒளிப்பரப்பாகிறது

உயிரும் மெய்யும் கலந்ததுதான் நம் மனித வாழ்க்கை. நமது உடலுக்கு உபாதைகள் வரும் போது உயிருக்கு ஆபத்து இல்லாமல் மருத்துவம் செய்து காப்பாற்றுவது மருத்துவர்களின் கடமை. அந்த மருத்துவர்களின் வாழ்விலும், தொழிலிலும் வரும் சிக்கல்களை  எதிர்கொண்டு அவர்கள் எப்படி வெற்றி கொள்கிறார்கள் என்பதே உயிர் மெய் தொடரின் சாராம்சம்.

இதுவரை   இரவு 8 மணிக்கு ஒளிப்பரபாகி வந்த உயிர் மெய் தொடர், வரும் 24ஆம் தேதி திங்கட்கிழமை முதல் இரவு 7 மணிக்கு ஒளிப்பரபாகவுள்ளது.

வெள்ளித்திரை நாயகி அமலா நடிக்கும் உயிர் மெய் தொடர் 25ஆவது எபிசோடில் இருந்து இயக்குனர் சுந்தர் கே விஜயன் இயக்கத்தில் பல திருப்பங்களுடன், விறுவிறுப்பான காட்சிகளுடன் ஒளிப்பரப்பாகி வருகிறது.

இத்தொடரில் அமலா, பரத்கல்யாண், கிரிஷ், ராஜா, ரேவதி சங்கர், துர்கா, பிரவின் வினித், ஸ்ருத்திகா மற்றும் பலர் நடிக்க, இயக்குனர் சுந்தர் கே.விஜயன் இயக்கத்தில், வசனம் – வெற்றி செல்வன், கதை மற்றும் திரைக்கதை – பத்ரி வெங்கடேசன், ஒளிப்பதிவு – எம் ராஜா, தயாரிப்பு – ரமேஷ், தயாரிப்பு மேற்பார்வை – அரவிந்த்.

Leave a Response