காங்கிரசு மாநிலங்களவை வேட்பாளர் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

மார்ச் 16,2026 அன்று நடைபெறவுள்ள மாநிலங்களவைத் தேர்தலில், திமுக கூட்டணியில் காங்கிரசுக் கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

அந்த இடத்தைப் பிடிக்கப் போவது யார்? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள வந்த நிலையில்,அதற்கு விடை சொல்லும்விதமாக, அகில இந்திய காங்கிரசுக் கட்சியின் செயலாளரான கிறிஸ்டோபர் திலக் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இந்த கிறிஸ்டோபர் திலக் திருச்சியைச் சேர்ந்தவர்.காங்கிரசுக் கட்சியின் இளைய தலைமுறையினரில் மிக முக்கியமானவராகக் கருதப்படுகிறார். கட்சியின் அடிமட்டத் தொண்டராகத் தொடங்கி, இன்று தேசிய அளவில் கவனிக்கத்தக்க நிலைக்கு உயர்ந்துள்ளார்.

தற்போது இவர் அகில இந்திய காங்கிரசு கமிட்டியின் செயலாளராகப் பணியாற்றி வருகிறார்.வடகிழக்கு மாநிலங்களான மணிப்பூர்,நாகாலாந்து,திரிபுரா மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்களின் கட்சிப் பொறுப்பாளராக (In-charge) நியமிக்கப்பட்டு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார்.

மணிப்பூர் போன்ற பதற்றமான சூழல் நிலவும் மாநிலங்களில் கட்சியின் நலனைப் பாதுகாப்பதிலும், களப்பணிகளை ஒருங்கிணைப்பதிலும் இவரது பங்களிப்பு இராகுல் காந்தி உள்ளிட்ட மேலிடத் தலைவர்களால் பாராட்டப்பட்டுள்ளது.

ஏற்கனவே தமிழ்நாட்டிலிருந்து ப. சிதம்பரம் போன்ற மூத்த தலைவர்கள் மாநிலங்களவையில் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இந்தமுறை ஒரு புதிய மற்றும் சுறுசுறுப்பான முகத்திற்கு வாய்ப்பளிக்க காங்கிரசு மேலிடம் விரும்பியதாக கூறப்படுகிறது.அந்த அடிப்படையில் தமிழ்நாட்டு மக்களுக்கு அதிகப் பரிச்சயம் இல்லாத இவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்று சொல்லப்படுகிறது.

Leave a Response