பொறுப்பற்ற முறையில் ஓடிப்போன விஜய் – உயர்நீதிமன்றம் கண்டனம்

கரூரில் செப்டம்பர் 27 ஆம் தேதி நடிகர் விஜய் பங்​கேற்ற பரப்புரைக் கூட்​டத்​தில் நெரிசல் ஏற்​பட்டு 41 பேர்
உயி​ரிழந்​தனர். 100-க்​கும் அதி​க​மானோர் படு​கா​யம் அடைந்​தனர். இதைத் தொடர்ந்​து, அரசி​யல் கட்​சிகளின் ‘ரோடு ஷோ’ நிகழ்​வு​களுக்குத் தடை விதிக்க வேண்​டும் என்று கோரி சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் வில்​லி​வாக்​கத்தைச் சேர்ந்த பி.எச்​.​தினேஷ் என்​பவர் வழக்கு தொடர்ந்​திருந்​தார்.

நீதிபதி என்​.செந்​தில்​கு​மார் முன்பு இந்த வழக்கு நேற்று விசா​ரணைக்கு வந்​தது.

அப்​போது நடந்த வாதங்கள்…

தமிழ்நாடு அரசு தரப்​பில் ஆஜரான கூடு​தல் தலைமை வழக்​கறிஞர் ஜெ.ர​வீந்​திரன்: வழி​காட்டு நெறி​முறை​கள் வகுக்​கும் வரை, ‘ரோடு ஷோ’ செல்ல எந்தக் கட்​சிக்​கும் அனு​மதி வழங்​கப்​ப​டாது என்று உயர்நீதி​மன்ற மதுரை அமர்​வில் அரசு தரப்​பில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

காவல் துறை தரப்​பில் ஆஜரான தலைமை குற்​ற​வியல் வழக்​கறிஞர் அசன் முகமது ஜின்​னா: கரூர் சம்​பவம் தொடர்​பாக பல்​வேறு பிரிவு​களின்​ கீழ் வழக்குப் பதிவு செய்​யப்​பட்​டு, தவெக கரூர் மாவட்​டச் செய​லா​ளர்
மதி​யழகன், நகரச் செய​லா​ளர் பவுன் ராஜ் ஆகியோர் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர். கட்​சி​யின் பொதுச் செய​லா​ளர் புஸ்ஸி ஆனந்த், துணை பொதுச் செய​லா​ளர் சிடிஆர். நிர்​மல்​கு​மார் ஆகியோர் மீதும் வழக்குப் பதிவு
செய்​யப்​பட்​டுள்​ளது. அவர்​கள் இரு​வரும் முன்​ஜாமீன் கோரி​யுள்​ளனர். புலன் விசா​ரணை நடந்து வரு​கிறது.

நீதிபதி செந்​தில்​கு​மார்: கரூர் சம்​பவத்​தில் உயி​ரிழந்​தவர்​களுக்கு ஆழ்ந்த இரங்​கலைத் தெரி​வித்​துக் கொள்​கிறேன். இதுதொடர்​பான காணொளி​கள் வேதனை அளிக்​கின்​றன. இந்த வழக்​கில் 2 பேர் மட்​டும் கைது
செய்​யப்​பட்​டுள்​ளனர். வேறு என்ன நடவடிக்கை எடுக்​கப்​பட்​டது? அனைத்​தை​யும் தமிழ்நாடு அரசு
அனு​ம​தித்​திருப்​பது அதிருப்தி அளிக்​கிறது.

விஜய் பயணம் செய்த பேருந்து மோதி விபத்து ஏற்​பட்​ட​தாக காணொளி​கள் வெளி​யாகி​யுள்​ளன. அந்த விபத்து தொடர்​பாக வழக்குப் பதிவு செய்​யப்​பட்​ட​தா? வழக்குப் பதிவு செய்​வதற்கு என்ன தடை? நிகழ்ச்சி ஏற்​பாட்​டாளர்​களுக்குக் கருணை காட்​டு​கிறீர்​களோ? பேருந்து மோதி​யது தொடர்​பாக வழக்குப் பதிவு செய்​யா​விட்​டால் காவல்​துறை மீது மக்​களுக்கு எப்​படி நம்​பிக்கை இருக்​கும். வழக்குப் பதிவு செய்​து, விஜய்​யின் பிரச்​சார வாக​னத்தை
பறி​முதல் செய்​திருக்க வேண்​டா​மா? இந்த விச​யத்​தில் நீதி​மன்​றம் கண்​மூடி வேடிக்கை பார்த்​துக் கொண்டு
இருக்​காது.

அரசு கூடு​தல் தலைமை வழக்​கறிஞர்: பிரச்​சா​ரத்​துக்​காக தவெக கேட்ட இடத்​தைத்​தான் ஒதுக்​கினோம்.
11 நிபந்​தனை​கள் விதிக்​கப்​பட்​டன. அதில் இரு நிபந்​தனை​கள் மட்​டுமே பூர்த்தி செய்​யப்​பட்​டன. மற்ற அனைத்து நிபந்​தனை​களும் மீறப்​பட்​டன. அதே இடத்​தில்​தான் எதிர்க்​கட்சித் தலை​வர் பழனிச்​சாமி பிரச்​சா​ரம் செய்​துள்​ளார். தவெக நிகழ்ச்​சி​யின் பாது​காப்புப் பணி​யில் 559 காவல்துறையினர் ஈடு​படுத்​தப்​பட்​டனர். அரசு மீது குறை கூறு​வது எளிது.

இவ்​வாறு வாதம் நடந்​தது.

இதைத் தொடர்ந்​து, நீதிபதி பிறப்​பித்த உத்​தர​வில்…

கரூரில் நடந்​துள்ள சம்​பவம் மனிதர்​களால் உரு​வாக்​கப்​பட்ட பேரழி​வு. நீதி​மன்​றம் இதை கண்​மூடி வேடிக்கை
பார்த்​துக் கொண்டு இருக்​காது. பொறுப்பை யாரும் தட்​டிக்​கழிக்க முடி​யாது. பிரச்​சா​ரக் கூட்​டத்​தில் நெரிசல்
ஏற்​பட்​டு, பெண்கள், குழந்தைகள் உட்பட ஏராள​மானோர் உயி​ரிழந்த நிலை​யில், கட்​சித் தொண்​டர்​களை​யும், இரசிகர்​களை​யும் பொறுப்​பற்ற முறை​யில் கைவிட்​டு​விட்டு தவெக தலை​வர் விஜய் உள்​ளிட்ட நிர்​வாகி​கள்
ஓடி​யுள்​ளனர். அவர்​களுக்கு தலை​மைப் பண்பு இல்​லை. சம்​பவத்​துக்கு பொறுப்​பேற்​காதது கண்​டனத்​துக்​குரியது.

இவ்​வாறு கூறி வழக்கை நீதிபதி முடித்​து​வைத்​தார்.

முன்​ன​தாக, கரூர் சம்​பவம் தொடர்​பாக சிபிஐ விசா​ரணைக்கு உத்​தர​விடக் கோரி, சென்னை மாநக​ராட்சி பாஜக உறுப்​பினர் உமா ஆனந்​தன் தரப்​பில் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் மனு தாக்​கல் செய்​யப்​பட்​டிருந்​தது. இதை அவசர வழக்​காக வி​சா​ரிக்​கு​மாறு, அவரது தரப்​பில் நீதிப​தி​கள் வேல்​முரு​கன், அருள்​முரு​கன் அமர்​வில் முறை​யிடப்​பட்​டது. இதற்கு மறுப்பு தெரி​வித்த நீதிப​தி​கள்​, உயர்​நீதி​மன்​ற மதுரை அமர்​வை அணுகு​மாறு மனு​தா​ரரை அறிவுறுத்​தினர்​.

இதற்கிடையே, தவெக தேர்​தல் பிரிவு பொதுச்​செய​லா​ளர் ஆதவ் அர்​ஜு​னா, தனது சமூக வலைதள பக்​கத்​தில், ‘இலங்​கை, நேபாளம் போல புரட்சி வெடிக்​கும்’ என கருத்து பதி​விட்​டிருந்​தார். பின்​னர் அந்தப் பதிவு நீக்​கப்​பட்​டது. அவர் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்​தர​விடக் கோரி, சென்னை அண்​ணாநகரை சேர்ந்த
எஸ்​.எம்​.க​திர​வன் என்​பவர் உயர் நீதி​மன்​றத்​தில் மனு தாக்​கல் செய்​திருந்​தார்.

இந்த வழக்​கும் நீதிபதி என்​.செந்​தில்​கு​மார் முன்பு விசாரணைக்கு வந்தது. ஆதவ் அர்ஜூனாவின் எக்ஸ் தள பதிவுகளும் நீதிபதியிடம் காண்பிக்கப்பட்டன. தொடர்ந்து நீதிபதி பிறப்​பித்த உத்​தர​வில் கூறி​யிருப்​ப​தாவது: ஒரு சின்ன வார்த்​தை​யும் பெரிய பிரச்​சினையை ஏற்​படுத்​தி​விடும். இவர்​கள் சட்​டத்​துக்கு அப்​பாற்​பட்​ட​வர்​களா? நடவடிக்கை எடுக்க நீதி​மன்ற உத்​தர​வுக்​காக காவல்​துறை காத்​திருக்​கிற​தா? புரட்சி ஏற்​படுத்​து​வது போல
கருத்​துகளைப் பதி​விட்​டுள்​ளார். இதன் பின்​புலத்தை விசா​ரித்து நடவடிக்கை எடுக்க வேண்​டும்.
பொறுப்​பற்ற பதிவு​கள் மீது காவல்​துறை கவனத்​துடன் வழக்கு பதிவு செய்​து, அனைத்து சட்​டப்​பூர்​வ​மான நடவடிக்​கைகளை​யும் எடுக்கவேண்​டும். இவ்​வாறு உத்​தர​விட்ட நீதிப​தி, வழக்​கை முடித்​து வைத்​தார்​.

கரூர் நிகழ்வு தொடர்பாக பொதுமக்களிடம் கடும் அதிருப்தியைச் சம்பாதித்திருக்கும் விஜய்க்கு நீதிமன்றமும் கடும் கண்டனம் தெரிவித்திருப்பது பெரும் பின்னடைவு என்கிறார்கள்.

Leave a Response