பல்லடத்தில் நடிகை ஆண்ட்ரியா தீபாவளிக் கொண்டாட்டம் – விவரம்

தீப ஒளித் திருநாள் – நம் மன இருள் அகல, இறை அருள் கிடைக்கக் கொண்டாடும் திருநாள்.

ஐப்பசி அமாவாசை அன்று கொண்டாடும் ஒரு இந்து பண்டிகை.

இராமன் பதினான்கு வருடங்கள் வனவாசம் முடித்து, நாடு திரும்பும் போது மக்கள் விளக்கேற்றி வரவேற்றனர்.

இந்துப் புராணக்கதைகளின் படி நரகன் என்ற அசுரன் இறந்த தினம்.

மாகவீரர், என்பவர் ஞானம் அடைந்த தினமாகவும், சைன / சமண மத்தினர் கொண்டாடுகின்றனர்.

சீக்கிய மதத் தலைவர், முகம்மதிய சிறையிலிருந்து மீண்டதற்காகக் கொண்டாடுகின்றனர்.

வட இந்தியாவில் 5 நாட்கள், இலக்குமிக்கு உரிய தினமாகவும் கொண்டாடுகின்றனர்.

இப்படிப் பல்வேறு வகைகளில் அழைக்கப்படும் தீபாவளி, ஏழை எளியோர் முதல் பணக்கார வலியோர் வரை கொண்டாடும் நாளாகத் திகழ்கிறது.

இவ்வாண்டு தீபாவளி அக்டோபர் 20 ஆம் நாள் வருகிறது.

அதையொட்டி கொங்குநாடு தீபாவளி திருவிழா 2025 கொண்டாட்டங்கள் நடைபெறவிருக்கின்றன.

அவை பற்றிய விவரம்….

அக்டோபர் 25 & 26, 2025 | பல்லடம் – கிளாசிக் சிட்டி

பல்லடம் கிளாசிக் சிட்டியில் நடைபெறவிருக்கும் “கொங்குநாடு தீபாவளி திருவிழா 2025”
இசை, நகைச்சுவை, கலாச்சாரம், உணவு மற்றும் மகிழ்ச்சியின் மாபெரும் திருவிழாவாக 2 நாட்கள் நடைபெற இருக்கிறது.

விழாவின் சிறப்பம்சங்கள்

நேரடி இசை நிகழ்ச்சியில், பிரபல நடிகையும் & பாடகியுமான ஆண்ட்ரியா ஜெரேமியா தனது இனிமையான குரலால் இரசிகர்களை மகிழ்விக்கவுள்ளார்.

ஸ்டாண்ட்-அப் நகைச்சுவை செய்ய தமிழ்நாட்டின் பிரபல நகைச்சுவை கலைஞர் மதுரை முத்து வருகிறார்.அவர், தனது சிரிப்பு பட்டாசால் அரங்கை அதிரவைக்கப் போகிறார்

காத்தாடி திருவிழா – கோவையில் முதன்முறையாக நடைபெறும் சர்வதேச காத்தாடி திருவிழா வண்ணமயமான காத்தாடிகள் வானத்தையும் நம் உள்ளத்தையும் பண்டிகை நிறத்தில் மாற்றவுள்ளது

உணவு விழா – கொங்குநாட்டின் பாரம்பரிய சுவைகள் மற்றும் சிறப்பு திருவிழா உணவுகள்!

உள்ளூர் கைவினைப்பொருட்கள், பிராண்டுகள் மற்றும் தனித்துவமான பொருட்கள் அடங்கிய கடைகள்.

பண்டிகை உற்சாகத்தை மேலும் உயர்த்தும் சிறப்பு அலங்காரம் மற்றும் விளையாட்டுகள் ஆகியன இடம்பெறவிருக்கின்றன.

இவ்விழாக் கொண்டாட்டத்தை,ரியல் எஸ்டேட் மற்றும் சமூக மேம்பாட்டில் முன்னணி நிறுவனமான என்வி லேண்ட்ஸ் (NV LANDS) நிறுவனம் ஒருங்கிணைக்கிறது.

கொங்குநாட்டின் கலாச்சாரத்தையும் பாரம்பரியத்தையும் சிறப்பிக்கும் இந்த மாபெரும் திருவிழாவை தவறவிடாதீர்கள். உங்கள் குடும்பத்துடன் பல்லடம், கிளாசிக் சிட்டியில் கலந்து கொண்டு உங்கள் தீபாவளியை கோலாகலமாக்குங்கள் என இந்நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது.

இக் கொண்டாட்டம் தொடர்பான மேலதிக விவரங்கள் அறிய enquiry@nvlands.com என்கிற மின்னஞ்சலிலும் +91-89258 86287 என்கிற தொலைபேசியிலும் தொடர்பு கொள்ளலாம்.

Leave a Response