அதிமுக ஒருங்கிணைவது எப்போது? – கட்சியினர் கூறுவது என்ன?

புதுச்சேரி முன்னாள் ஆளுநரும் தற்போது பாஜக உறுப்பினருமான தமிழிசை சவுந்தரராஜன் மதுரை விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

அப்போது, அதிமுக – பாஜக கூட்டணி மீண்டும் ஏற்படும் என்று முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியிருப்பது குறித்து கேட்கப்பட்டது.

அதற்கு,தேர்தல் வரும்போது எதுவும்,எப்படியும்,எங்கும் நடக்கலாம்.இப்போதைக்கு எங்கள் வேலை கட்சியைப் பலப்படுத்த உறுப்பினர் சேர்க்கை பணிகள் மட்டுமே.

கூட்டணி குறித்து எங்கள் தேசிய தலைவர்கள் முடிவு செய்வார்கள்.

ஒன்றிய அரசின் திட்டங்கள் இந்தியில் உள்ளன.அவற்றைத் தமிழ்படுத்தினால் மட்டுமே மக்களுக்கு புரியும்.இந்தப் பணிகளை மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறோம்

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

எதுவும் நடக்கலாம் என்று அவர் கூறியிருப்பதால் அதிமுக பாஜக கூட்டணி உறுதியாகிவிடும் என்றும் அதற்கு முன்னதாக அதிமுகவின் ஒருங்கிணைப்பு நடக்கும் என்றும் அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

இது தொடர்பாக அதிமுகவைச் சேர்ந்தவர்கள் கூறும்போது,அதிமுக நிச்சயமாக ஒருங்கிணையும் அது தேர்தல் நெருக்கத்தில் நடக்கும். அப்போதுதான் தொண்டர்கள் கருத்துவேறுபாடுகளை மறந்து புத்துணர்ச்சியுடன் வேலை செய்வார்கள்.எனவே தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாக அதிமுக ஒருங்கிணையும் அனைத்துத் தலைவர்களும் ஒரே மேடையில் தோன்றுவார்கள் என்கிறார்கள்.

அதிமுக ஒருங்கிணைந்த பின்பு பாஜகவுடன் கூட்டணியா அல்லது கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள்,தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஆகிய்ன உள்ளிட்ட தற்போது திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளோடு மெகா கூட்டணியா என்பது முடிவாகும் என்றும் சொல்கிறார்கள்.

Leave a Response