இராமர் கோயிலில் காணிக்கை பணம் மோசடி – வெளியான அதிர்ச்சித் தகவல்

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் அமைந்துள்ள இராமர் கோயில் வளாகத்​தில் உள்ள 15 கோயில்​களில் 44 காணிக்கைப் பெட்​டிகள் வைக்​கப்​பட்​டுள்​ளன.அவைதவிர,அறக்​கட்​டளை​யின் 2 அலு​வல​கங்​களி​லும் நன்​கொடை வசூலித்து பற்றுமுறிகள் வழங்​கப்​படு​கின்​றன.

அந்தக் கோயிலில் பக்தர்களால் செலுத்தப்படும் காணிக்​கைப் பணம் திருடப்​படு​வ​தாக துறவி​கள் மற்றும்அரசி​யல் கட்சித் தலை​வர்​கள் புகார் தெரி​வித்து வருகின்ற​னர்.

இந்​நிலை​யில்,இராமர் கோயில் காணிக்கை பணம் எண்​ணும் குழு உறுப்​பினர் மகிபால் சிங், பல குற்​றச்​சாட்​டு​களைக் கூறி காணொலி வெளி​யிட்​டுள்​ளார்.

அதில்,

இராமர் கோயிலில் பணம் எண்​ணும் போது பெட்​டி​யில் 10 கட்​டு​கள் இருப்​ப​தாக ஆவணத்​தில் குறிப்பிடப்​படு​கிறது. ஆனால்,வங்கி ஊழியர்​கள் உண்​மை​யில் 13 கட்​டு​களைப் பெட்​டி​யில் வைத்​திருந்​தனர்.இந்த முரண்​பாட்டை
உணர்ந்​து,பெட்​டி​யில் இருந்த கட்​டு​களைச் சரிபார்த்த போது 10 இருக்கவேண்​டிய இடத்​தில் 13 பணக்​கட்​டு​கள்
இருந்​தன.

இது எவ்​வளவு கால​மாக நடை​பெறுகிறது என்​பதை விசா​ரிக்க,இராமர் கோயில் அறக்​கட்​டளை நிர்​வாகி​களுக்​குத் தகவல் தெரி​வித்​தேன்.பின்​னர்,நன்​கொடைகளைச் சரிபார்த்து எண்​ணுவதற்​காக மேலும் 2 பேர் நியமிக்​கப்​பட்​டனர். அதன்பிறகும் குறை​கள் சரிசெய்​யப்​பட​வில்​லை.ஆனால்,என்​னைப் பணி​யில் இருந்து நீக்​கி​விட்​டனர் என்று
கூறி​யுள்​ளார்.

இந்தக் காணொலியை, தனது சமூகவலை​தளப் பக்​கத்​தில் இணைத்து சமாஜ்​வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் வெளி​யிட்ட பதி​வில்,

இன்று உலகம் அறிந்து கொண்ட இந்​தச் செய்​தி,உண்​மை​யில் மிக​வும் பழையது.‘ட்​ரஸ்ட்’ (அறக்​கட்​டளை)
என்​றால் நம்​பிக்​கை.இந்த விவ​காரத்தை அறக்​கட்​டளையே தீவிர​மாக எடுத்​துக்கொண்​டு,நீதித்துறை விசா​ரணைக்கு வலி​யுறுத்த வேண்​டும்.குற்​ற​வாளி​களைத் தண்​டிக்க வேண்​டும்.அரசு ஏன் மவுனம் காக்​கிறது? விசா​ரணை
கோரிக்​கை​யைக் கண்டு முக்​கியப் புள்​ளி​கள் அஞ்​சுகிறார்​களா? என்று கேள்வி எழுப்​பி​யுள்​ளார்.

இது உத்தரபிரதேச மாநில மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்கிறார்கள்.

Leave a Response