
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் நேற்று (ஜூன் 13,2026) நெல்லை சரக டி.ஐ.ஜி திருநாவுக்கரசிடம்,ஸ்ரீவைகுண்டம் சமஉ சரவணன் மீது புகார் கொடுத்துள்ளார்.
அதைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது….
நான் ஜெயபால்,பாலா ஆகிய இருவரால் கூட்டு பலாத்காரத்துக்கு ஆளானேன்.வைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன்,லாட்டரிக்கு கமிஷன் வேலை அப்படின்னு சொல்லி,என்னை இராமநாதபுரத்துல ஏஜெண்டாகிய ஜெயபால பாக்கணும்னு சொல்லி,பாலா எங்க வீட்டுக்கே வந்து கார்ல ஏத்திட்டு போனாரு.போன இடத்துல எங்களுக்கு ஜூஸ்ல வந்தது.நானும் இன்னொரு பொண்ணும் இருந்தோம்.அந்தப் பொண்ணு இப்ப அவங்ககிட்ட பணம் வாங்கிக்கிட்டு அவங்களுக்காக ஏதோ ஒரு ஆடியோ வெளியிட்டுருக்கா.என்கிட்ட ஒரு ஆடியோ இருக்கு.அங்க நானும் அந்தப் பொண்ணும் சேர்ந்து போயிருந்தோம்.அந்தப் பொண்ணை நான்தான் கூட்டிட்டு போனேன் வேலைன்னு சொன்னதுனால.
போன இடத்துல எங்களுக்கு ஜூஸ் கொடுத்து,அதுல மயக்க மருந்து கொடுத்து,எங்களை வந்து கூட்டு பாலியல் பலாத்காரம் பண்ணிட்டாங்க.ஆனால் அவங்களோட வீட்டம்மா,நான் பணமோசடி பண்ணிருக்கேன்னு சொல்றாங்க. எனக்கு 78,000 ரூபாய் பாலா கொடுத்தது உண்மை.எதுக்கு கொடுத்திருக்காருங்கறதும் என்கிட்ட ஆதாரங்கள் இருக்கு.இந்த தவறுகளுக்கு எல்லாம் உறுதுணையா இருக்கிறது வி.ஜி.சரவணன்ங்கறவர்தான்.அவரு இப்போதைய ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர்.அவரோட பேரை நான் அறிவித்த நாள் முதல் அவரோட ஆதரவாளர்கள் வந்து எனக்கு நிறைய இடைஞ்சல்கள்,அதாவது என்னை அசிங்கமா பரப்புராங்க.மிரட்டுராங்க.
நான் தளபதியோட தீவிர இரசிகை,என்னைய பத்தி ‘ஆடுனா பாடுனா’னு சொல்றாங்க.நான் 4 ஆம் தேதி ஆடினது உண்மை.என்னை ஆடவைத்தது வி.ஜி.சரவணனுடைய துணைவியார் உமாதான்.அந்த ஃபுட்டேஜ் காமிக்கச் சொல்லுங்க.சும்மா செல்லுல உள்ள போட்டோ மட்டும் காட்டுறாங்க.உண்மையான ஃபுட்டேஜ் காமிக்கச் சொல்லுங்க,என்னை இழுத்து ஆடவிட்டது யாருன்னு தெரியும்.
இப்போது சரவணன் சட்டமன்ற உறுப்பினர் மேலயும்,என்னைப்பற்றி தவறாகப் புகார் அளித்த பாலா, அவர்களுடைய மனைவி மேலயும் கம்ப்ளைன்ட் கொடுத்திருக்கேன்.
ஏற்கனவே தூத்துக்குடி எஸ்பி சார்ட்டயும் கொடுத்திருந்தேன்,இன்னைக்கு வரைக்கும் நடவடிக்கை எடுக்கல. மாறாக எனக்கு எதிரான வீடியோக்களையே போட்டு பதிவு பண்ணிக்கிட்டே இருக்காங்க.
நான் ரெண்டு பேரால கூட்டு பலாத்காரம் பண்ணப்பட்ட பெண்,என்னை வந்து தமிழக வெற்றி கழகத்தில இருந்து நீக்கியிருக்காங்களாம்.அதேமாதிரி குற்றவாளியான பாலாவையும் நீக்கியிருக்காங்க.இதுக்கு உறுதுணையாக இருந்த சட்டமன்ற உறுப்பினர் சரவணனை என்ன செய்வாங்க?அவங்க பதவியிலிருந்து நீக்குவாங்களா? இதுக்கு எனக்கு தலைமையும் பதில் சொல்லணும்.
இன்னொன்னு என்னோட போட்டோவைக் காமிச்சதுனால என்னோட வாழ்வாதாரம் ரொம்ப பாதிக்குது,என் பையனால ஸ்கூலுக்கு போக முடியல.அவமானங்கள்…எனக்கு அவமானங்கள்.எனக்கு வேலை இல்லை,வேலை எங்கயும் கேட்க முடியல.எனக்கு நீதி வேணும்,எங்க வேணாலும் போய் நீதி கேப்பேன்
இவ்வாறு அவர் கண்ணீர்மல்கக் கூறினார்.
இந்த கண்ணீர்ப் பேட்டியைத் தொடர்ந்து, இந்தப்பெண்ணின் கண்ணீருக்கு என்ன பதில் விஜய் அவர்களே? எனப்பலரும் சமூகவலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.


