விஜய் கட்சியினரின் கூட்டுப் பாலியல் வன்கொடுமை – மு.வீ எதிர்ப்பு

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியில்,விஜய் கட்சியின் இளைஞரணி நிர்வாகிகளால் இளம்பெண் ஒருவர் கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாகவும், இதுகுறித்து புகாரளிக்கக் கூடாது என அப்பகுதி தவெக சட்டமன்ற உறுப்பினர் சரவணன் பாதிக்கப்பட்ட பெண்ணை மிரட்டுவதாகவும் செய்திகள் வெளியாகின.

இதற்கு பல்வேறு கட்சியினர் மற்றும் சமூக அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.அந்த வரிசையில் விஜய் அரசுக்கு ஆதரவளித்துவரும் கட்சியும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

ஸ்ரீவை​குண்​டத்​தில் இளம்​பெண் கூட்டுப் பாலியல் வன்​கொடுமைக்கு ஆளாக்​கப்​பட்ட சம்​பவத்​தில் தொடர்​புடைய ஆளும் கட்சி நிர்​வாகி​கள் மீது கடுமை​யான நடவடிக்கை எடுக்க வேண்​டும் என்று இந்​தி​ய
கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் தமிழ்நாடு செய​லா​ளர் மு.வீர​பாண்​டியன் வலி​யுறுத்​தி​யுள்​ளார்.

இதுகுறித்து அவர் வெளி​யிட்​டுள்ள சமூகவலைதளப் பதி​வில்…

ஸ்ரீவை​குண்​டம் இளம்​பெண் கூட்டு பாலியல் வன்கொடுமையில் தவெக நிர்​வாகி​கள் ஈடு​பட்​டுள்ள நிகழ்வு தமிழகம் முழு​வதும் அதிர்ச்சி அலையை உரு​வாக்​கி​யுள்​ளது.காவல்துறை​யில் புகார் அளிக்​கக்கூடாது என
எம்​எல்ஏ வி.ஜி.சர​வணன் மிரட்​டியதாக அப்​பெண் குற்​றம் சாட்​டி​யுள்​ளார்.சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.பாதிக்​கப்​பட்ட பெண்​ணுக்கு உரிய நிவாரண​மும்,அரசு வேலை​யும்,பாது​காப்​பும் வழங்கவேண்​டும்

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Response