திமுக செய்ததையே தவெகவும் செய்கிறது – அண்ணாமலை விமர்சனம்

நாங்கள் தலைவர்கள் அமைப்பின் தலைவர் அண்ணாமலை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்….

சென்னையில், மொத்தம் விற்பனையாகும் சுமார் 14.75 இலட்சம் லிட்டர் ஆவின் பாலில்,கிட்டத்தட்ட 50%,சுமார் 7.5 இலட்சம் லிட்டர் பால் விற்பனை,பச்சைநிற கிரீன் மேஜிக் பாக்கெட்பால் ஆகும்.

இந்த நிலையில்,கிரீன்மேஜிக் பால் விற்பனை குறைக்கப்பட்டு,குறைந்த அளவே தற்போது விற்பனைக்கு வழங்கப்படுகிறது என்ற செய்தி அறிந்து,அது குறித்து விசாரித்ததில்,ஏற்கனவே சுமார் 50% விற்பனை குறைக்கப்பட்டிருப்பதாகவும்,படிப்படியாக,கிரீன்மேஜிக் வகை பால் விற்பனை நிறுத்தப்படவுள்ளதாகவும்,ஆவின் விற்பனை மையங்களிலேயே கூறுகின்றனர்.

ஆனால்,தவெக அரசு தற்போது வெளியிட்டிருக்கும் செய்தி வெளியீட்டில்,கிரீன்மேஜிக் பால் விற்பனை குறைக்கப்படவில்லை என்று கூறப்பட்டிருக்கிறது.அப்படியானால்,ஏன் ஆவின் மையங்களில் முன்புபோல அது கிடைப்பதில்லை? கிரீன்மேஜிக் வகை பால் விற்பனை கணிசமாகக் குறைந்துள்ளதை பொதுமக்களே அறிவார்கள். யாரை ஏமாற்ற இந்த பொய்யான விளக்கத்தை அளிக்கிறது தவெக அரசு?

கடந்த 2023 ஆம் ஆண்டு திமுக ஆட்சியிலும் இதேபோல,4.5% கொழுப்புச் சத்துள்ள பச்சைநிற பாக்கெட் பால் விற்பனையை நிறுத்திவிட்டு,3.5% கொழுப்பு சத்துள்ள ஊதாநிற பாக்கெட்பால் விற்பனை செய்ய முடிவெடுத்த போது,எதிர்க்கட்சிகள் எதிர்ப்பால் அந்த முடிவை திமுக அரசு கைவிட்டது.ஆனால்,தற்போதைய தவெக அரசும் அதேமுடிவை மக்களிடம் திணிப்பது,வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

கிரீன்மேஜிக் வகை பால்விற்பனை குறைப்புக்கு,நிதி இழப்பைக் காரணமாகக் கூறுகிறார்கள்.நிதி இழப்பைச் சரிசெய்ய,பால் உற்பத்தியையும்,பால் மற்றும் பால் பொருள்கள் விற்பனையையும் அதிகரித்து,அதன்மூலம் நிதி இழப்பைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டுமே தவிர,ஏழை எளிய மக்கள் அதிகம் பயன்படுத்தும் பால் வகை விற்பனையை நிறுத்தக்கூடாது.

உடனடியாக,மீண்டும் போதுமான அளவு,பச்சைநிற கிரீன் மேஜிக் பாக்கெட் பால் விற்பனையைக் கொண்டு வரவேண்டும் என்றும்,பால் உற்பத்தி,கொள்முதல் மற்றும் விற்பனை உள்ளிட்டவற்றை அதிகரிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டும் என்றும் தவெக அரசை வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Response