தமிழ்நாடு அரசு நடத்தும் முத்தமிழ் முருகன் மாநாடு – ஆய்வுக்கட்டுரை எழுத அழைப்பு

தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறை சார்பாக அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு 2024 ஆகஸ்ட் மாதம் 24, 25 ஆம் தேதிகளில் நடைபெறுகிறது.

பழனியில் நடைபெறவிருக்கும் இம்மாநாட்டில் முருக பக்தர்கள் பங்கேற்கவும், ஆய்வு மாணவர்கள் ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பிக்கவும் https:/muthamizhmuruganmaanadu 2024.com/ என்கிற தனி இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.

அதில், ஆய்வுக் கட்டுரைகளை மாணவர்கள் சமர்ப்பிப்பதற்கான வழிமுறைகள் மற்றும் தலைப்புகளை இந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது

இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்….

உலககெங்கும் நிலவும் முருக வழிபாடு, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் முருகன், சங்க இலக்கியங்களில் சேயோன் மற்றும் முருகன் இலக்கியங்களில் வழிபாடு, கல்வெட்டுகளில் முருக வேல், வேத மரபிலும் தமிழ், கள் தலைவன், செந்தமிழ் முருகன், நாட்டார் வழக்காறுகளில் முருக வழிபாடு, சேய்த் தொண்டர் புராணம் மற்றும் பல்வேறு இலக்கியங்களில் முருகனடியார்கள், வடமொழி இலக்கியங்களில் தென்தமிழ் முருகன், முருகனும் முத்தமிழும், முருகன் அடியார்கள் பலர் குறித்த முக்கியத் தகவல்கள், செய்திகள் மற்றும் திருப்பணிகள் போன்ற தலைப்புகளில் ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பிக்க வேண்டும்.

பல்வேறு அடியார்கள், நூல்கள், கலைப்படைப்புகள் குறித்த தரவுகள். காளிதாசனின் குமாரசம் பவம், ஆதிசங்கரரின் சுப்ரமணிய புஜங்கம், வடமொழியில் உள்ள ஸ்காந்தம் இவற்றுடன் தமிழில் உள்ள முருக இலக்கியங்கள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் ஆழமாகவும் ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பிக்கலாம். இந்த மாநாட்டில் முருகன் தொடர்பான ஆய்வுக் கட்டுரைகள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

கட்டுரையில் மின்னஞ்சல் முகவரி, கைபேசி எண், பகிரி எண் மற்றும் புகைப்படம் ஆகியன அவசியம் இடம் பெற வேண்டும். சுருக்கக்குறிப்பு மற்றும் முழுக் கட்டுரை இணையதளம் வாயிலாக ஜூன் 20 ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு 94986 65116 அல்லது mmm2024palani @gmail.com மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

கட்டுரை தேர்வு குறித்த தகவல் கட்டுரையாளர்களுக்கு ஜூலை 1 ஆம் தேதிக்குள் தெரிவிக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response