வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் சதி – சீமான் பேட்டி

சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் தொடர்பாக தில்லியில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், தமிழ்நாடு, கேரளா, உத்தரப் பிரதேசம், குஜராத், இராஜஸ்தான் உள்ளிட்ட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும். பீகாரில் ஏற்கெனவே நடந்து முடிந்த நிலையில், இரண்டாம் கட்டமாக இந்த மாநிலங்களில் பணிகள் நடைபெறவுள்ளதாகவும் அறிவித்தார்.

இந்தத் திருத்தப் பணிகளுக்கு, தமிழ்நாட்டில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.எடப்பாடி பழனிச்சாமி அணியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், விடுதலைப் போராட்ட வீரர்கள் மருது சகோதரர்கள் குருபூசையையொட்டி, நேற்று சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் அவர்களது நினைவிடத்தில் சீமான் மரியாதை செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதுபற்றிக் கூறியதாவது…

சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம் தமிழ்நாட்டில் முறையாக நடக்குமா என்பது சந்தேகமே? அதில் ‘சதி’ இருப்பது உண்மைதான்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Response