
நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசும்போது….
கரூரில் 41 பேர் உயிரிழந்த குற்றத்துக்கு முதன்மைக் காரணம் விஜய்தான். தவறு இல்லை என்றால் ஏன் முன்ஜாமீன் கேட்கிறார்கள்?. குற்றத்துக்குkக் காரணமானவரையே சிபிஐ விசாரிக்காது எனில் பிறகு எப்படி நியாயம் வெளிவரும்?. யாரைப் பார்க்க கூட்டம் கூடியதோ அந்த நபர் மீது சிபிஐ எஃப்ஐஆர் பதிவு செய்யாதது ஏன்?. யாருடைய வருகையால் கூட்டம் கூடியது என்பது தான் கேள்வி? விஜய் வரவில்லை என்றால் அங்கு கூட்டம் கூடியிருக்குமா?. இவருக்கு இந்தச் சம்பவத்தில் பொறுப்பு இல்லையா?
கூட்டணியில் சேர்ப்பதற்காகத்தான் ஆதவ் அர்ஜுனா, விஜய் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யவில்லை. கூட்டணிக்கு விஜய் வரவில்லை எனில் அவர் மீது வழக்குப்பதிவு செய்வார்கள். காவல்துறை மீது தவறு உள்ளதா என்பதை விசாரித்து முடிவெடுக்கப்படும். முதலில் உங்கள் பயணம் சேலத்தில் தானே இருந்தது, பின்னர் கரூருக்கு ஏன் மாற்றினீர்கள்?
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு விசாரணையில் இருக்கும்போது பாதிக்கப்பட்ட குடும்பங்களை விஜய் தனிமையில் சந்தித்துப் பேசியது ஏன்?. ரூ.20 இலட்சம் பணம் கொடுத்துவிட்டு நேரில் சந்தித்துப் பேசினால் உண்மை எப்படி வெளியே வரும்.
விசாரணையை சிபிஐக்கு மாற்றியதும் முன்ஜாமீன் மனுவை புஸ்ஸி ஆனந்த் திரும்பப் பெறுகிறார் எனில் சிபிஐ அவரைப் பாதுகாக்கிறதா?. மக்கள் மனங்களில் மாறுதல் வேண்டும். அப்போதுதான் எல்லாமே மாறும். தேர்தல் முடிவுகள் ஆளுங்கட்சிக்குத் தான் சாதகமாக இருக்கும் என்பதைக் கூற முடியாது.
இவ்வாறு சீமான் தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் குறித்தும் கரூர் கொடுநேர்ச்சி குறித்தும் அவர் எழுப்பிய கேள்விகளுக்குப் பெரும் ஆதரவு கிடைத்துவருகிறது.
சிபிஐ விசாரணை நடக்கும் நேரத்தில் பாதிக்கப்பட்டோரை தனிமையில் விஜய் சந்தித்து விசாரணையின் போது எனக்கு எதிராக வாக்குமூலம் கொடுத்துவிடாதீர்கள் என்று கெஞ்சிக் கேட்டுக் கொண்டார் என்று ஒரு தகவல் உலவுகிறது.
அதை மெய்ப்பிக்கும் விதமாக சீமானின் கேள்விகள் அமைந்து திடுக்கிட வைத்துள்ளன.


