
இயக்குநர் சேரன், தம்முடைய கருத்துகளை சமூகவலைதளங்கள் மூலம் வெளிப்படுத்தி வருபவர்.அவர் நடிகர் விஜய் குறித்து எதிர்த்தும் ஆதரித்தும் பதிவுகள் இட்டிருக்கிறார்.
அதனால் அவருடைன் சமூகவலைதளம் மூலமே பலர் உரையாடி வருகிறார்கள். அந்த வகையில் இன்று விஜய் கட்சியினருக்கு சேரன் எழுப்பிய கேள்வி பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது
அவர் விஜய் கட்சியினரிடம் கேட்டதாவது…
நட்புடன் உங்களிடம் ஒரு கேள்வி… இதே கருத்துகளை முன்வைத்துதான் கடந்த பத்தாண்டுகளாக நாதக போராடி வருகிறது.. மக்களுக்கான பிரச்னைகளை சொல்லி பேசி சிந்திக்க வைக்கிறது.. வாக்காளராக எதன் அடிப்படையில் நாதகவை ஒதுக்கி தவெகவை ஆதரிக்க நினைக்கிறீர்கள்… தெரிந்துகொள்ளத்தான் கேட்கிறேன்.
என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
சேரனின் இந்தக் கேள்விக்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் பலர் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
அதேசமயம், விஜய் அரசியல் கட்சி தொடங்கியதிலிருந்தே நாட்டில் பலர் மனதில், இவர் ஏன் இப்போது கட்சி தொடங்கவேண்டும்? அதற்கான தேவை என்ன? இவருக்கு என்ன அரசியல் தெரியும்? என்கிற கேள்வி எழுந்து கொண்டிருக்கிறது.
இன்னமும் விடை தெரியாமல் இருக்கும் அதேகேள்வியை சேரனும் கேட்டதோடு ஒருபடி மேலே சென்று, விஜய் பேசுவதைக் காட்டிலும் சீமான் பனமடங்கு பேசுவதோடு களத்தில் நின்று போராடியும் வருகிறார்.அப்படிப்பட்டவரை விட நீங்கள் எந்த விதத்தில் உசத்தி என்று உச்சந்தலையில் அடித்தது போல் கேட்டிருப்பது பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
குறிப்பு – சேரன் கேட்ட இந்தக்கேள்விக்கு சரியான விடைகூட இல்லை ஒரு விடையைக் கூட விஜய் கட்சியினரால் சொல்ல முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.வெற்று ஆரவாரம் தான் எதிர்வினைகளாக வந்து கொண்டிருக்கின்றன.


