சீமானை காப்பியடிக்கும் விஜய் – வெளியான விமர்சனம்

தன்னுடைய தமிழக வெற்றிக் கழகத்தின் அன்றாடப் பணிகளையும் செயல்பாடுகளையும் ஒருங்கிணைக்க, புதியதாக நிர்வாகக் குழு ஒன்றை நியமித்துள்ளார் நடிகர் விஜய். இந்தக் குழுவில், ஆனந்த் – பொதுச்செயலாளர், ஆதவ் அர்ஜுனா – தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச்செயலாளர், அருண்ராஜ் – கொள்கை பரப்புப் பொதுச் செயலாளர், நிர்மல் குமார் – இணைப் பொதுச்செயலாளர், ராஜ்மோகன் – துணைப் பொதுச்செயலாளர் ஆகியோரோடு சில மாவட்டச் செயலாளர்கள் உட்பட மொத்தம் 28 நிர்வாகக் குழு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த அறிவிப்பு வெளியானவுடனே இதுகுறித்து பல்வேறு கருத்துகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

அவற்றில் ஒன்று..

விஜய்க்கு எந்த அரசியல் அறிவும் கிடையாது சொந்த புத்தியும் கிடையாது என்பது இந்த அறிவிப்பின் மூலம் மீண்டும் உறுதியாகியிருக்கிறது.ஏன் இப்படிச் சொல்கிறேனென்றால்? கட்சி தொடங்குவதற்கு முன் பலமுறை அண்ணன் சீமான் அவர்களைச் சந்தித்து அவருடைய அறிவுரைகளைக் கேட்டுக் கொண்டு கட்சிப் பெயர், கட்சிக்கொடி மற்றும் கொள்கைகள் ஆகியனவற்றை வடிவமைத்தவர் விஜய்.அதன்பின் அவரையே விமர்சனம் செய்தார்.

இப்போது, விஜய் திடீரென நிர்வாகக் குழு ஒன்றை அமைத்திருக்கிறார் என்பதுதான் எல்லோருக்கும் தெரிந்த செய்தி.இதற்கு சில நாட்கள் முன்பாக நாம் தமிழர் கட்சியிலும் இதுபோன்றதொரு நிர்வாகக் குழுவை அமைத்தார் சீமான்.

அது முழுக்க கட்சியினருக்கானது என்பதால் அந்தக் குழு பற்றிய விவரங்களை அக்கட்சியினருக்கு மட்டுமே அறிவித்தார்.

அதைப்பார்த்துவிட்டு ஈயடிச்சான் காப்பியாக விஜய்யும் நிர்வாகக் குழுவை அமைத்திருக்கிறார்.

இதை வைத்துத்தான் விஜய்க்கு சொந்த புத்தி கிடையாது அண்ணன் சீமான் தந்த புத்திதான் இருக்கிறது என்று சொல்கிறேன்

இவ்வாறு அதில் சொல்லப்பட்டிருக்கிறது.

Leave a Response