தமிழுக்காக உண்ணாநிலை – நாம் தமிழர் கட்சிக்கு ஒரு வினா?

தமிழ்நாடு உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்கு என்ற கோரிக்கையை முன் வைத்து பிப்ரவரி 28 ஆம் நாள் முதல் வழக்குரைஞர்கள், சட்டக்கல்லூரி மாணவர்கள், சனநாயகர்கள் உட்பட 24 பேர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துகின்றனர்.கோரிக்கை நிறைவேறும்வரை போராட்டம் தொடரும் என்றும் அறிவித்துள்ளனர்.

உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கெடுத்துள்ளோர் பட்டியல்:

1.வழக்குரைஞர். புகழ்வேந்தன்,
2.புளியந்தோப்பு மோகன்,
3.வழக்குரைஞர். சங்கர்,
4.மருது மக்கள் அதிகாரம்,
5.வழக்குரைஞர். வேல்முருகன்,
6.வழக்குரைஞர். அருண்குமார்,
7.வழக்குரைஞர். திசையிந்திரன்,
8.காளிதாசன்
தாய்த் தமிழ்ப் பள்ளி அம்பத்தூர்,
9.பாவலர் கீர்த்தி,
10.வழக்குரைஞர். செல்வகுமார்,
11.வழக்குரைஞர். தெய்வம்மாள்,
12.வழக்குரைஞர். பாரதி,
13. நிறைமதி
சட்டக்கல்லூரி மாணவி,
14.வழக்குரைஞர். பகத்சிங்,
15. சின்னப்ப தமிழர்,
16. குருசாமி,
17. வணங்காமுடி
சட்டக்கல்லூரி மாணவர்,
18. தொல்காப்பியன்,
19.வழக்குரைஞர். கலைச்செல்வன்,
20.வழக்குரைஞர். யாசர் கான்,
21.வழக்குரைஞர். மெய்யப்பன்,
22.வழக்குரைஞர். ரமேசு,
23. தமிழ்ப்பித்தன், தபெதிக,
24. வளர்மதி
பொதுநல மாணவர் எழுச்சி இயக்கம்,
சட்டக்கல்லூரி மாணவி.

இப்போராட்டம் தொடங்கிய நாள் முதல் தமிழ்நாட்டின் பல்வேறு ஊர்களிலும் இவர்களுக்கு ஆதரவாக அடையாளப் போராட்டங்களும் பொதுக்கூட்டங்களும் நடத்தப்பட்டு வருகின்றன.

இன்று இப்போராட்டம் தொடங்கிய எட்டாம்நாள்.

இந்நிலையில் போராட்டத்தில் பங்கேற்றுள்ள சிவ.காளிதாசன் வெளியிட்டுள்ள பதிவு….

நாம் தமிழர் கட்சிக்கு, ஒரு வினா?
உண்ணாப் போராட்டப் பந்தலிலிருந்து ……
தமிழ்நாட்டின் உயர் அறமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்கக் கோரி 24 தமிழ் உறவுகள் 28.02.2024 முதல் உண்ணாப் போராட்டம் நடத்தி வருகின்றோம்.
உங்கள் கட்சியினரோ, நீங்களோ ஏன் எங்களை வந்து பார்க்கவில்லை, ஆதரவாகப் பேசவில்லை.
ஓர் அறிக்கையைக் கூட விடவில்லையே அது ஏன்?
தமிழர் சமூகத்துக்காக உழைக்கிறேன் என்று மேடை தோறும் பேசும் உங்கள் சொற்கள் பொய்யானாதா?
தாய்த் தமிழ் உறவுகளே! உங்கள் பிள்ளைகள் நாங்கள் .
உங்களது ஒரு வாக்கை எங்களுக்கு அளித்து உங்கள் பிள்ளைகளை மன்றத்துக்கு அனுப்புங்கள் எனக் கேட்கும் செந்தமிழன் சீமான் அவர்களே,
நாங்கள் உயிரைக் கொடுத்துப் போராடுகிறோமே அதை ஏன் உங்கள் அரசியலுக்கு பயன்படுத்தத் தெரியவில்லை.
உங்கள் அரசியல் அறிவு அவ்வளவுதானா?
உண்ணமறுத்து உடலை வருத்தி உறக்கமின்றித் தவிக்கும் தமிழர் 24 பேர்களுக்கும் இன்று எட்டாம் நாள்.
தமிழ்நாடே எட்டைக் கொண்டாடு?
06.03.2024 காலை 7.12.

இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.

– ஆநிரையன்
.

Leave a Response