தமிழ்த்தேசியக்கட்சி நிறுவனர், காங்கிரசுக்கட்சியின் மூத்த தலைவர் ஆகிய அடையாளங்களைக் கொண்ட ஈ.வெ.கி.சம்பத்தின் 98 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு, சத்தியமூர்த்திபவனில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவபடத்துக்கு, தமிழ்நாடு காங்ங்கிரசுக் கட்சியின் முன்னாள் தலைவர்கள் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன, கே.வீ.தங்கபாலு, கிருஷ்ணசாமி, மாநில துணைத் தலைவர் கோபண்ணா, மாநில பொதுச் செயலாளர்கள் ரங்கபாஷ்யம், பி.வி.தமிழ்செல்வன், இலக்கிய அணித் தலைவர் புத்தன் உட்பட பலர் கலந்து கொண்டு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
அதன்பின், ஈவிகேஎஸ்.இளங்கோவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது…..
பிரதமர் மோடி நாடு தான் என் குடும்பம் என்று சொல்வதை விட காடு தான் என் குடும்பம் என்று சொன்னால் சரியாக இருக்கும். ஏனென்றால் குரங்குகளும், பன்றிகளும், ஓநாய்களும் அவருக்கு உறவினர்களாக இருப்பதற்குச் சரியானவர்கள். அடுத்த முறை மோடி தமிழ்நாடு வரும் போதும் தமிழர்களின் வரவேற்பு வேறு விதமாக இருக்கும். காங்கிரசு தான் திமுக, திமுக தான் காங்கிரசு. மோடியை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்பதில் ஒத்த கருத்து கொண்ட கட்சியாக உள்ளோம்.
வரும் தேர்தலுக்குப் பின்னர் பிரதமர் மோடி நாட்டை விட்டு வெளியேறி ஆப்பிரிக்காவில் குடியேறுவார்.
திமுக கூட்டணியில் இணைந்து 5 முறை காங்கிரசு தேர்தலைச் சந்தித்துள்ளது. காலத்தின் சூழ்நிலைக்கு ஏற்ப தொகுதிகள் பிரித்தாளப்படுகிறது. காமராஜர் காலத்தில் இருந்த காங்கிரசு தற்போது இல்லை என்பதை ஏற்றுக் கொள்கிறேன். அதேநேரம் திமுக கூட்டணியில் காங்கிரசுக்கான தொகுதியை ஒதுக்குவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். திமுகவில் தொகுதிகள் குறைக்கப்படுகிறது என்பதில் உண்மையில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.