மூன்றாம் கட்டத் தேர்தல் முடிந்தது – விவரம்

18 ஆவது மக்களவைக்கான பொதுத்தேர்தல்
நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. கடந்த ஏப்ரல் 19 ஆம்தேதி நடைபெற்ற முதல்கட்டத் தேர்தலில் 102 தொகுதிகள், ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெற்ற 2 ஆம் கட்டத்தேர்தலில் 88 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதைத் தொடர்ந்து, 3 ஆம் கட்டமாக 10 மாநிலங்கள், ஒரு யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த 93 மக்களவைத் தொகுதிகளுக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது.

இதன்படி அசாமில் 4, பிகாரில் 5, சத்தீஸ்கரில் 7, டாமன்-டையூவில் 2, கோவாவில் 2, குஜராத்தில் 25, கர்நாடகாவில் 14, மத்தியப் பிரதேசத்தில் 9, மகாராஷ்டிராவில் 11, உத்தரப் பிரதேசத்தில் 10, மேற்கு வங்கத்தில் 4 ஆகிய தொகுதிகளில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை வரை விறுவிறுப்பாக நடைபெற்றது.

நாடு முழுவதும் 93 தொகுதிகளில் காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது.

மொத்தம் 64.08 விழுக்காடு வாக்குகள் பதிவாகின. அசாமில் அதிகபட்சமாக 75 விழுக்காடு வாக்குகளும், மகாராஷ்டிராவில் குறைந்தபட்சமாக 53 விழுக்காடு வாக்குகளும் பதிவாகின.

Leave a Response