ம.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நேற்று காலை எழும்பூரிலுள்ள அக்கட்சி அலுவலகமான தாயகத்தில் நடைபெற்றது. ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ, பொருளாளர் கணேசமூர்த்தி, துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா உள்ளிட்ட நிர்வாகிகளும் மாவட்டச் செயலாளர்களும் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் வைகோவின் மகனானா துரை வையாபுரிக்குக் கட்சியில் பதவி வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் அவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி கலந்து கொள்ளவில்லை. இந்தக் கூட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள், ஆட்சிமன்றக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
ஆலோசனைக்குப் பிறகு துரை வையாபுரிக்கு பதவி வழங்குவது குறித்து இரகசிய வாக்கெடுப்பு நடைபெற்றது. அதில், வைகோ உள்ளிட்ட கட்சியின் நிர்வாகிகள் வாக்களித்தனர்.
அதில், 106 வாக்குகளில் 104 பேர் துரை வையாபுரிக்குப் பதவி வழங்கவேண்டும் என்று வாக்களித்தனர்.
அதனையடுத்து, துரை வையாபுரிக்கு தலைமைக் கழகச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
அதனையடுத்து, வைகோ வாரிசு அரசியலை முன்னெடுக்கிறார் என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன.
திமுகவில் வாரிசு அரசியல் இருக்கிறது என்கிற குற்றச்சாட்டை முன் வைத்தே மதிமுக என்கிற தனிக்கட்சி கண்டவர் வைகோ என்பது குறிப்பிடத்தக்கது.