இன்றும் உயர்ந்தது பெட்ரோல் டீசல் விலை – ஏற்றிக்கொண்டே இருக்கும் மோடி

செப்டம்பர் மாத இறுதியிலிருந்து பெட்ரோல், டீசல் விலை தினசரி உயர்ந்து வருகிறது. நேற்று பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.103.31-க்கும் டீசல் விலை லிட்டருக்கு ரூ.99.26 -க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், சென்னையில் இன்றும் உயர்ந்துள்ளது. அதன்படி பெட்ரோல் விலை லிட்டருக்கு 30 காசுகள் அதிகரித்து ரூ.103.61 ஆகவும், மற்றும் டீசல் விலை லிட்டருக்கு 33 காசுகள் உயர்ந்து ரூ.99.56 விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வு இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.

நாள்தோறும் இப்படி விலையை உயர்த்திக்கொண்டேயிருக்கிறார் மோடி.

மாநில அரசுகளும் இதுபற்றி எதிர்வினை ஆற்றாமல் அமைதி காக்கின்றன. மக்கள்தாம் அவதிப்பட்டு, சாபம் விட்டுக் கொண்டிருக்கின்றனர்.

Leave a Response