செந்தில்பாலாஜியை பார்த்து அவ்வளவு பயமா? – திமுகவினர் கேள்வி

கிருஷ்ணகிரி மாவட்​டம், ஊத்​தங்​கரை சட்​டப்​பேர​வைத் தொகு​தி​ தவெக சட்டமன்ற உறுப்பினர்
டாக்​டர் என்​.இளை​ய​ராஜாவை,சில நாட்​களுக்கு முன்பு சென்​னையைச் சேர்ந்த திரு​நாவுக்​கரசு என்ற நபர் கைபேசியில் தொடர்பு கொண்​டுள்​ளார்.அப்​போது,தான் கருத்​துக் கணிப்பு நிறு​வனத்தை (Indian Political Democratic Strategies -IPDS) நடத்தி வரு​வ​தாக​வும்,முக்​கிய அரசி​யல்கட்​சி​யைச் சேர்ந்த சிலரின் சார்​பில் பேசுவ​தாக​வும் கூறி நேரில் சந்​திக்க விருப்​பம் தெரி​வித்​த​தாகக் கூறப்​படு​கிறது.வேறு பணி​யில் இருப்​ப​தாகக் கூறி இளை​ய​ராஜா அந்த அழைப்பைத் துண்​டித்​துள்​ளார்.

அதன்பின்​னரும் மீண்​டும் தொடர்பு கொண்​ட​ கூறப்​படும் திரு​நாவுக்​கரசு,தமிழக சட்​டப்​பேர​வை​யில் சபா​நாயகருக்கு எதி​ராக நம்​பிக்​கை​யில்லாத் தீர்​மானம் கொண்டு வரப்பட உள்​ள​தாக​வும்,அந்த தீர்​மானத்​தின் மீதான
வாக்​கெடுப்​பின்போது தாங்​கள் சொல்லும் வகை​யில் செயல்பட வேண்​டும் என்​றும் கூறிய​தாகத் தெரி​கிறது.

அதற்கு பிர​திபல​னாக ரூ.35 கோடி வரை வழங்கத் தயா​ராக இருப்​ப​தாக ஆசை வார்த்தை கூறிய​தாக​வும்,அதற்கு இளை​ய​ராஜா மறுப்பு தெரி​வித்தபோது,இந்த விவ​காரம் குறித்து வெளி​யில் கூறி​னால் உங்​களுக்​கும்,உங்​கள்
குடும்​பத்​தினருக்​கும் பின்​விளைவு​கள் ஏற்​படும் என்று மிரட்​டல் விடுத்​த​தாக​வும் ஜூன் மாதம் 29 ஆம் தேதி,
இளை​ய​ராஜா சென்னை காவல் ஆணை​யர் அமல்​ராஜிடம் புகார் அளித்​தார்.

அதில்,மக்​களால் தேர்ந்​தெடுக்​கப்​பட்ட சட்​டப்​பேரவை உறுப்​பின​ரான என்னை சட்​ட​விரோத​மாகச் செல்​வாக்கு செலுத்த முயற்​சித்​ததுடன்,இலஞ்​சம் வழங்க முன்​வந்​தும்,உயிருக்கு அச்​சுறுத்​தல் விடுத்​தும் செயல்​பட்​ட​வர்​கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்​டும் என்று கூறியிருந்தார்.

அந்த புகாரின் அடிப்​படை​யில்,திரு​வல்​லிக்​கேணி காவல்துறையினர் வழக்​குப் பதிந்து விசா​ரணை நடத்​தினர்.
கைபேசி அழைப்பு விவரங்​கள்,தொழில்​நுட்ப ஆதா​ரங்​கள் மற்​றும் கிடைத்த தகவல்​களின் அடிப்​படை​யில்,சென்னை அரும்​பாக்​கத்​தைச் சேர்ந்த திரு​நாவுக்​கரசு,திருச்​சி​யைச் சேர்ந்த நரேஷ்,சென்னை மேட​வாக்​கத்​தைச் சேர்ந்த
தியாக​ராஜன் ஆகிய 3 பேரை நேற்று கைது செய்​தனர்.

கைது செய்யப்பட்ட மூவரையும் உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள சென்னை முதன்மை அமர்வு நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன்னிலையில் நேற்று ஆஜர்படுத்தினர்.

வழக்கை விசாரித்த நீதிபதி,3 பேரையும் ஜூலை 15 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் 3 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த வழக்கில்,கரூர் ஈரோடு சாலையில் கேவிபிஓஏ நகரில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிக்கும் சக்தி மெஸ் உரிமையாளர் கார்த்தி (45),அதன் பங்குதாரர் அதிபன் ரமேஷ் (42) ஆகியோரது வீடுகளில் சென்னை திருவல்லிக்கேணி காவல்துறையினர் நேற்று சோதனை மேற்கொண்டனர்.இருவரையும் விசாரணைக்காக சென்னைக்கு அழைத்து வந்துள்ளனர்.

இவர்கள் திமுக பிரமுகர்கள் என்றும்,முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியின் நெருங்கிய ஆதரவாளர்கள் என்றும் காவல்துறை தரப்பில் சொல்லப்படுகிறது.இதுதொடர்பாக நடை​பெற்ற விசா​ரணை​யில்,செந்​தில் பாலாஜி​யின்
சகோ​தரர் அசோக்குமார்,இந்த வழக்​கில் கைது செய்​யப்​பட்ட நரேஷை சென்​னை​யில் சந்​தித்​தது தெரியவந்​துள்​ளது என்று காவல்துறை தரப்​பில் கூறப்​பட்​டுள்​ளது.

இந்தச் செய்தி குறித்து திமுக தரப்பினர் கூறுவதாவது…

விஜய் குதிரைபேரத்தில் ஈடுபட்டார் என்பதை வைகோ வாக்குமூலமாகவே கொடுத்திருக்கிறார்.அதனடிப்படையில் திமுக சார்பில் புகார் கொடுக்கப்பட்டிருக்கிறது.அதோடு,நேற்று முன்தினம் கரூர் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தன் பதவியைத் துறந்துவிட்டு தவெகவில் இணைகிறார்.எனவே அந்தத் தொகுதிக்கு இடைத்தேர்தல் வரவிருக்கிறது.அதற்கு முன்பாக செந்தில்பாலாஜியை ஏதாவது ஒரு வழக்கில் சிக்க வைத்து அமைதிப்படுத்தியாக வேண்டும் இல்லையெனில் கரூரில் திமுக வென்றுவிடும் என்பதாலேயே இப்படியெல்லாம் நடக்கின்றன.கைதானவர்களை வலுக்கட்டாயமாக செந்தில்பாலாஜியுடன் தொடர்புபடுத்துகிறார்கள்.ஏனெனில் செந்தில்பாலாஜியைப் பார்த்து அவ்வளவு பயம் என்று சொல்கிறார்கள்.

Leave a Response