ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன.
அதில், திமுக அறுதிப்பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கவிருக்கிறது.
அதற்கடுத்து 66 இடங்களைப் பிடித்திருக்கிறது அதிமுக.
அதனால், அக்கட்சி சட்டமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சியாக இருக்கப்போகிறது.
இதனால் ஒரு புதிய சிக்கல் எழுந்துள்ளதாகச் சொல்கிறார்கள்.
அது என்ன?
பிரதான எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பு ஓ.பன்னீர்செல்வத்துக்கா? எடப்பாடி பழனிச்சாமிக்கா? என்கிற போட்டி எழுந்துள்ளதாம்.
முதலமைச்சராக இருந்தவர் என்பதால் எடப்பாடி பழனிச்சாமிதான் எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பை ஏற்க வேண்டும் என்று அவருடைய ஆதரவாளர்களும், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் தான் என்பதால் அதனடிப்படையில் அவர்தான் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பேற்க வேண்டுமென அவருடைய ஆதரவாளர்களும் கூறுகின்றனராம்.
இதனால் அதிமுகவில் விரைவில் சர்ச்சை வெடிக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள்.