தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. இதில் திமுக தலைமையிலான கூட்டணி சுமார் 158 தொகுதிகளில் வென்றுள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைவது உறுதியாகிவிட்டது.
இதனைத் தொடர்ந்து திமுக தலைவர் ஸ்டாலினுக்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் எனப் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தனது ட்விட்டர் பக்கத்தில் திமுக கூட்டணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது……
சமூக நீதி, கல்வி, சுகாதாரம் ஆகியவற்றில் தமிழ்நாடு வரலாறு காணாத வளர்ச்சியடைய, இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கு ஓர் எடுத்துக்காட்டாய்த் திகழ, தி.மு.க கூட்டணிக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்!
இவ்வாறு ஏ.ஆர்.ரகுமான் கூறியுள்ளார்.
அவருடைய வாழ்த்தில், சமூகநீதி, கல்வி, சுகாதாரம் மற்றும் இந்தியாவின் ஒருமைப்பாடு ஆகியன பற்றிச் சொல்லியிருக்கிறார்.
கடந்த ஏழாண்டு கால பாஜக ஆட்சியில் ஏ.ஆர்.ரகுமான் கூறிய நான்கு விசயங்களிலும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
ஏ.ஆர்.ரகுமான் இவை நான்கையும் குறிப்பிட்டு வாழ்த்தியிருப்பதால் பாசகவினர் அவர் மீது கோபமாக இருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது