கே.வி.இராமலிங்கம் கே.சி.பழனிச்சாமி கடும்போட்டி – ஈரோடு மேற்கு தொகுதி அதிமுகவினர் கவலை

ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் 8 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன.

இவற்றில் ஒன்றான ஈரோடு மேற்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக இருப்பவர் கே.வி.இராமலிங்கம்.

2011 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் நடந்த தேர்தல்களின்போது அதிமுக சார்பில் போட்டியிட்டு வென்றார்.

ஜெயலலிதா அமைச்சரவையில் இரண்டாண்டுகள் அமைச்சராகவும் இருந்தார்.

வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் இதே தொகுதியில் போட்டியிட எண்ணி அதற்கான தயாரிப்பு வேலைகளில் தீவிரமாக இருக்கிறார்.

அதேநேரம், ஈரோடு மாநகராட்சி துணை மேயராகப் பணியாற்றிய கே.சி.பழனிச்சாமி, இந்தத் தொகுதியில் போட்டியிட முனைப்பு காட்டுகிறாராம்.

அதற்காக இத்தொகுதிக்குட்பட்ட கட்சி நிர்வாகிகளைத் தன் பக்கம் இழுக்கும் வேலைகளில் இறங்கியிருக்கிறாராம்.

மாவட்ட அமைச்சர்கள் மற்றும் மாநில நிர்வாகிகளையும் சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார் என்று சொல்லப்படுகிறது.

சாதி, வசதி வாய்ப்பு மற்றும் செலவு ஆகிய எல்லாவற்றிலும் இருவரும் சம அளவில் இருக்கிறார்கள் என்பதால் யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பது தெரியாமல் இருக்கிறது.

இருவரில் யாருக்கு வாய்ப்பு கிடைத்தாலும் இன்னொருவர் அவருக்கு எதிராக உள்ளடி வேலை செய்வது நிச்சயம் எனும் நிலை.

இதனால் அதிமுக தொண்டர்கள் கவலை அடைந்திருக்கிறார்கள்.

Leave a Response