சென்னையில் வெளுத்து வாங்கிய மழை – காரணம் என்ன?

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று முன் தினம் இரவு தொடங்கி நேற்று பகலிலும் மழை வெளுத்து வாங்கியது. பல இடங்களில் கனமழையும் கொட்டியது. வடகிழக்குப் பருவமழைக் காலம் நிறைவு பெற்று இருந்தாலும், பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. அந்தவகையில் ஜனவரி மாதம் 12–ந்தேதி வரை மழை தொடரும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் இதுவரை ஜனவரி மாதத்தில் பெய்த மழை அளவில் இன்று பெய்த மழைதான் அதிகம் என்று கூறப்படுகிறது. கடந்த 1915–ம் ஆண்டுக்கு பிறகு, ஜனவரி மாதத்தில் இன்று அதிகளவு மழை பெய்து இருக்கிறது என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். அதன்படி, 105 ஆண்டுகளுக்கு பின் சென்னையில் அதிக அளவு மழை பதிவாகி உள்ளது.

இடைவிடாமல் மழை பெய்தது ஏன்?

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடைவிடாமல் திடீரென்று மழை பெய்ததற்கான காரணம் குறித்து ஆய்வு மைய அதிகாரிகளிடம் கேட்டபோது,

சென்னைக்குக் கிழக்கே வங்கக்கடலில் மிகப்பெரிய மேகத்திரள் கூட்டங்கள் ஒன்று கூடியதன் விளைவாகவும், கிழக்கில் இருந்து கீழ்நிலைக் காற்றும், மேற்கில் இருந்து மேல்நிலைக் காற்றும் ஒருசேர வீசியதன் விளைவாகவும் இடைவிடாமல் மழை வெளுத்து வாங்கியது. இதுபோன்ற நிகழ்வுகள் குறிப்பிட்ட சில சந்தர்ப்பங்களில் தான் நிகழும். அந்தவகையில் இந்த நிகழ்வு ஏற்கனவே கணிக்கப்பட்ட ஒன்றுதான். ஆனால் எந்த பகுதிகளில் மழை இருக்கும் என்பது தெரியாமல் இருந்தது. அது தற்போது சென்னையில் கொட்டி தீர்த்து இருக்கிறது என்றனர்.

மழை இன்றும் தொடரும் என்று சொல்கின்றனர்.

Leave a Response