உலகம் வியந்த உன்னதப் போராளி – தொல்திருமாவளவன் புகழாரம்

தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் 66 ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி உலகெங்கும் உள்ள தமிழ் மக்கள் அவருக்குப் பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்து சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.

தமிழீழம் உட்பட உலகின் பல்வேறு நாடுகளில் உறவினர் மற்றும் நண்பர்களுக்கு இனிப்பு கொடுத்து இந்நாள் கொண்டாடப்பட்டுவருகிறது.

தமிழகத்தில் நாம் தமிழர் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல அமைப்புகள் பிரபாகரன் பிறந்தநாள் வாழ்த்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

குழந்தைகளுடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடினார் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்திருமாவளவன்.

அதற்கு முன் ட்விட்டர் பதிவில் அவர் வெளியிட்டுள்ள செய்தியில்,

“அண்ணன் இருக்கிறேன் துணிந்து களமாடுங்கள்” – என மார்போடு அணைத்து என்னை மனமார வாழ்த்திய மேதகு அண்ணன் பிரபாகரன் அவர்களின் பிறந்தநாள் நவம்பர்26.
உலகம் வியந்த உன்னதப் போராளியின் பிறந்தநாளில்
ஈழம் வென்றெடுக்க உறுதியேற்போம்!
HBDTamilsLeaderPrabhakaran

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Response