முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் – யாழ் பல்கலைக்கழக மாணவர்களை மிரட்டும் சிங்களக் காவல்துறை

மே 18 – தமிழர்கள் கொத்துக்கொத்தாகக் குண்டுவீசி கொலை செய்யப்பட்டு, ஈழ நிலம் முழுவதும் இரத்தச் சகதியிலே நனைந்து, ஒப்பாரியும், ஓலமும் நாட்புறமும் எதிரொலிக்க இரண்டு இலட்சம் தமிழர்களின் பிணக்குவியல்கள் மத்தியில், முள்ளிவாய்க்கால் நிலத்தில் யாவும் முற்றுப்பெற்று விட்டதாகச் சொல்லப்பட்ட நாள்.

ஆண்டுதோறும் அந்த நாளையொட்டி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் கடைபிடிக்கப்படுகிறது. அந்நாட்களில் மறைந்த மக்களுக்காக ஒளீயேற்றி வணங்குவர்.

இவ்வாண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் முதல்நாள் நினைவேந்தல் மே 13 அன்று யாழ்ப்பாணம் செம்மணியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் நினைவு கூறப்பட்டது.

சிங்களக் காவல்துறை மற்றும் இராணுவத்தினர், இப்படி ஒரு நிகழ்ச்சியை நடத்தக்கூடாது என்று அச்சுறுத்தியுள்ளனர். ஆனால் அதற்கு மத்தியிலும் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.

மே 14 அன்று,முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தின் 2 ஆம் நாளை முன்னிட்டு யாழ் பல்கலைக்கழகம் முன்பாக
சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

முள்ளிவாய்க்கால் நினைவுச் சுடர் ஏற்றிய பல்கலைக்கழக மாணவர்களின் விபரங்கள் சிங்களக் காவல்துறையினரால் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

இத்தகவல் சமூகவலைதளங்கள் மூலம் வெளியானதும்,எங்கள் உறவுகளை நினைத்து அழுவதற்கும் எங்களுக்கு உரிமையில்லையா? என்று தமிழீழ மக்கள் கொந்தளிக்கின்றனர்.

Leave a Response