
ஆணவப் படுகொலை செய்யப்பட்ட சங்கரின் மனைவி கவுசல்யா, அதன்பின்னர் ஆணவக் கொலைக்கு எதிராக குரல் கொடுத்து சமூகப்பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
அவருக்கு அரசுப் பதவியும் வழங்கப்பட்டது. இதனிடையே நிமிர்வு கலையகத்தின் பொறுப்பாளர் சக்தி என்பவரை சமீபத்தில் கவுசல்யா மறுமணம் செய்துகொண்டார்.
இந்நிலையில் குன்னூர் வெலிங்டன் கண்டோன்மென்ட் கிளார்க் பணியிலிருந்து உடுமலை கவுசல்யா பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசிய குற்றச்சாட்டில் கவுசல்யாவை பணியிடை நீக்கம் செய்து நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளதாகச் சொல்லப்படுகிறது.


