மீண்டும் விராட்கோலி – ரசிகர்கள் உற்சாகம்

மேற்கிந்தியத்தீவுகள் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. தற்போது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த தொடர் முடிந்த பின்னர் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் கவுகாத்தியில் 21-ந்தேதி தொடங்குகிறது.

ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் முதல் இரண்டு போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. வேகப்பந்து வீச்சாளர்கள் பும்ரா மற்றும் புவனேஸ்வர் குமார் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால் முகமது ஷமி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அதேபோல் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆன ரிஷப் பந்த் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஆசிய கோப்பைக்கான தொடரில் ஓய்வு அளிக்கப்பட்ட இந்திய அணி தலைவர் விராட் கோலி மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். இதனால் அவருடைய ரசிகர்கள் மிக உற்சாகம் அடைந்துள்ளனர்.

முதல் இரண்டு போட்டிக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

1. விராட் கோலி (தலைவர்), 2. ரோகித் சர்மா (துணைத் தலைவர்), 3. ஷிகர் தவான், 4. அம்பதி ராயுடு, 5. மணிஷ் பாண்டே, 6. எம்எஸ் டோனி (விக்கெட் கீப்பர்), 7. ரிஷப் பந்த், 8. ஜடேஜா, 9. சாஹல், 10. குல்தீப் யாதவ், 11. முகமது ஷமி, 12. கலீல் அகமது, 13. ஷர்துல் தாகூர், 14. கேஎல் ராகுல்.

ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Response