தோனி ஓய்வு குறித்து விராட்கோலி கருத்து

சர்வதேச மட்டைப்பந்து போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக மகேந்திர சிங் தோனி அறிவித்துள்ளார்.

இந்திய மட்டைப்பந்து அணியின் முன்னாள் தலைவர் மகேந்திர சிங் தோனி, சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருப்பது அவரது ரசிகர்களுக்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களுக்கும் வேதனையைத் தரும் செய்தியாகும்.

தோனி ஓய்வு அறிவித்ததையடுத்து கிரிக்கெட் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் என பலர் தங்களது கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

இந்திய அணியின் தற்போதைய தலைவர் விராட் கோலி தோனியின் ஓய்வு குறித்து உருக்கமான கருத்தைப் பதிவிட்டுள்ளார்.

அதில், “அனைத்து கிரிக்கெட் வீரர்களும் ஒருநாள் தன்னுடைய பயணத்தை முடித்தாகத்தான் வேண்டும். ஆனால் மனதிற்கு நெருக்கமானவர்கள் இத்தகைய முடிவை எடுக்கும்போது நமக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும். இந்த நாட்டிற்காக தோனி செய்துள்ள சாதனைகள் அனைவரின் நினைவுகளிலும் நீங்காத இடத்தை அவருக்கு அளிக்கும்.
ஆனால் சக வீரராக தோனி கொடுத்த மரியாதை, அரவணைப்பு தன்னுள் நீங்காமல் இருக்கும். தொடர்ந்து இந்த உலகம் சாதனைகளை மட்டுமே பார்க்கும், ஆனால் தான் மனிதனை மட்டுமே பார்ப்பதாகவும், தோனி தனக்கு அளித்த அனைத்திற்கும் நன்றி. உங்களுக்கு தலை வணங்குகிறேன்“

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Leave a Response