கேதார் ஜாதவ் தப்பினார் – இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு

2019 உலக்க் கோப்பை மட்டைப் பந்தாட்டத் தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் வரும் மே 30 ஆம் தேதி துவங்கி ஜூன் 14 வரை என மொத்தம் 48 போட்டிகள் நடக்கவுள்ளது.

அதில் 45 லீக் போட்டிகள் மற்றும் 3 நாக் அவுட் போட்டிகள் என மொத்தம் 12 நகரங்களில் நடக்கிறது. இந்தத்தொடரில் இந்தியா உட்பட பத்து அணிகள் பங்கேற்கின்றன.

இந்திய அணி கபில்தேவ் தலைமையில் 1983 ஆம் ஆண்டும், மகேந்திர சிங் தோனி தலைமையில் 2011 ஆம் ஆண்டும் கிரிக்கெட் உலக்க் கோப்பையை வென்றுள்ளது.

தற்போது மூன்றாவது முறையாக உலகக் கோப்பையை வெல்ல விராட் கோலி தலைமையிலான இந்திய அணி தயாராகி வருகிறது. மீண்டும் ஒருமுறை கோப்பையை வென்று இந்தியாவை உலக சாம்பியன் ஆக்குவாரா? விராட் கோலி என்ற எதிர்பார்ப்பு அனைவரின் மத்தியில் எழுந்துள்ளது.

ஜூன் 5 ஆம் தேதி உலகக் கோப்பையில் இந்தியா தனது முதல் ஆட்டத்தை தொடங்கும். முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை எதிர்க்கொள்கிறது இந்திய அணி. மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டி ஜூன் 16 ஆம் நாள் நடைபெறவுள்ளது. உலகக் கோப்பை தொடரில் இந்தியா ஒருபோதும் பாகிஸ்தானிடம் தோற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இது உலக்க் கோப்பை தொடர் ரவுண்ட் சுற்று ராபின் வடிவமைப்பில் விளையாடப்படுகிறது. இதில் அனைத்து அணிகளும் ஒருவரோடு ஒருவர் போட்டியிடுவார்கள். அதாவது, ஒவ்வொரு அணி குறைந்தது 9-9 போட்டிகளில் விளையாடும். இதன் பிறகு முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிப் போட்டிக்கு செல்லும். இதில் வெற்றி பெரும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெரும். உலகக் கோப்பை இறுதிப்போட்டி ஜூலை 14 ஆம் தேதி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும்.

ஏற்கனவே இந்திய கிரிக்கெட் வாரியத்தால் அறிவிக்கப்பட்ட 15 பேர் கொண்ட இந்திய அணியில் எவ்வித மாற்றமும் இல்லை என பிசிசிஐ அறிவித்துள்ளது.

கேதார் ஜாதவ் ஏற்ப்பட்ட காயம் காரணமாக அணியில் மாற்றம் செய்யப்படுமா? என்ற சூழல் ஏற்ப்பட்டிருந்த நிலையில், கேதார் ஜாதவ் முழு உடற்தகுதியுடன் உள்ளதால், இன்று இங்கிலாந்து செல்லும் இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார்.

உலககோப்பையில் பங்கேற்கும் இந்திய அணி:-
விராட் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா, ஷீகார் தவான், கே.எல்.ராகுல், எம்.எஸ்.தோனி(விக்கெட் கீப்பர்), விஜய் சங்கர், கேதார் ஜாதவ், தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, புவனேஸ்வர் குமார், குல்தீப் யாதவ், யுஜ்வேந்திர சகால், ஜாஸ்பிரிட் பூம்ரா, முகமது ஷமி.

Leave a Response