தங்கம் வாங்கவேண்டாம் என பிரதமர் மோடி சொல்வது ஏன்?

நடப்பு நிதி​யாண்​டின் முதல் காலாண்​டில், இந்​தி​யா​வின் பொருளா​தார வளர்ச்சி 7.8 விழுக்காடாக உள்​ளது. அமெரிக்கா – ஈரான் போர்,கச்சா எண்​ணெய் விலை உயர்வு உள்​ளிட்ட பல்​வேறு சவால்​களுக்கு மத்​தி​யில் நாட்​டின் பொருளா​தார வளர்ச்சி கணிச​மாக அதி​கரித்து வரு​கிறது என்று சொல்லப்படுகிறது.

இந்தச்சூழலில் பிரதமர் நரேந்​திரமோடி சமூகவலை​தளத்​தில் வெளி​யிட்ட காணொலியில் கூறி​யிருப்​ப​தாவது….

நாட்​டின் பொருளா​தார வளர்ச்சி 7.8 விழுக்காடாக உள்​ளது.இந்​தி​யர்​களின் கடின உழைப்​பால் இந்தச் சாதனை
சாத்​தி​ய​மாகியுள்​ளது.இதற்​காக நாட்டு மக்​கள் அனை​வருக்​கும் வாழ்த்​துகளைத் தெரி​வித்​துக் கொள்​கிறேன்.

இந்தநேரத்​தில் சுதேசிக் கொள்​கைகளை இந்​தி​யர்​கள் அனை​வரும் கடை​பிடிக்க வேண்​டும்.உள்​நாட்​டில்
தயாரிக்​கப்​பட்ட பொருட்​களை மட்​டுமே வாங்கவேண்​டும்.தேவை​யில்​லாமல் வெளி​நாட்டுப் பயணங்​களை
மேற்​கொள்​ளக்கூ​டாது.வெளி​நாடு​களில் திரு​மணங்​களை நடத்​தக்கூ​டாது.தேவை​யில்​லாமல் தங்​கத்தை
வாங்​கக்​கூ​டாது.

நாட்​டின் 100 ஆவது சுதந்​திர தினத்தைக் கொண்​டாடும் ​போது வளர்ச்சி அடைந்த இந்​தியா என்ற இலட்​சி​யத்தை
எட்​டிப்பிடிக்க வேண்​டும்.இதற்​காக அனைத்துத் தரப்பு மக்​களும் கடின​மாக உழைக்கவேண்​டும்.நாட்​டின் 140 கோடி மக்​களும் இணைந்து செயல்​பட்​டால் நம்​மால் புதிய சிகரங்​களை எட்டமுடி​யும்.

வீட்​டில் இருந்து பணி​யாற்​றும் நடை​முறையை நிறு​வனங்​கள் பின்​பற்றவேண்​டும்.இதன்​மூலம் பெட்​ரோல்,டீசல் பயன்​பாட்டைக் குறைக்க முடி​யும்.சொந்த வாக​னங்​களைப் பயன்​படுத்​தாமல் பேருந்​து,ரயில்,மெட்ரோ ரயில்
உள்​ளிட்ட பொதுப்போக்​கு​வரத்தைப் பயன்​படுத்த வேண்​டும்.பெட்​ரோல்,டீசல் வாக​னங்​களுக்​குப் பதிலாக மின்​சார வாக​னங்​களுக்கு மாறவேண்​டும்.

இவ்​வாறு பிரதமர் மோடி தெரி​வித்​துள்​ளார்.

கடந்த மே மாத​மும் பிரதமர் மோடி இது​போன்ற வேண்​டு​கோளை முன்​வைத்​தார்.இந்​தி​யா​வின் தங்கம் தேவை​யில் 99% வெளி​நாடு​களில் இருந்து இறக்​குமதி செய்​யப்​படு​கிறது.2025-26 ஆம் நிதி​யாண்​டில் வெளி​நாடு​களில் இருந்து ரூ.6.4 இலட்​சம் கோடிக்கு தங்​கம் இறக்​குமதி செய்​யப்​பட்​டது.இதற்கு அமெரிக்க டாலரில் பணம் செலுத்த
வேண்​டியுள்​ளது.கச்சா எண்​ணெய் இறக்​கும​திக்​கும் டாலரில் பணம் செலுத்த வேண்​டிய கட்​டா​யம் உள்​ளது.

வெளிநாடுகளிடம் தங்​கம்,கச்சா எண்​ணெய் வாங்​கி​னால் நாட்​டின் அந்​நிய செலா​வணி கையிருப்பு கணிச​மாகக் குறை​யும்.இது நாட்​டின் பொருளா​தார வளர்ச்​சி​யைப் பா​திக்​கும்.இதன் காரண​மாகவே தேவை​யின்றி தங்​கம் வாங்க வேண்​டாம்,பொதுப் போக்​கு​வரத்தைப் பயன்​படுத்த வேண்டும் என்றெல்லாம் பிரதமர்​ மோடி அறி​வுறுத்​தி உள்​ளார்​.

Leave a Response