
பீகார் மாநிலம் பங்கிப்பூர் மற்றும் மபியின் தட்டியா ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் ஆளும் பாஜக படுதோல்வியடைந்தது.
இந்தநிலையில் உபி தலைநகர் லக்னோவில் சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் இதுகுறித்துப் பேசுகையில்….
நேர்மையின்மை இல்லாமல் தேர்தல்களில் வெற்றிபெற முடியுமா என்பதைச் சோதித்துப் பார்க்கவே,பாஜக இந்த இடைத்தேர்தல்களில் வேண்டுமென்றே தோல்வியடைந்தது.உபி மற்றும் மேற்குவங்கத்தில் அது கையாண்ட மாதிரியை பங்கிபூர் மற்றும் தட்டியா ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் பின்பற்றவில்லை.
மக்களை திசை திருப்புவதற்காக மட்டுமே பாஜக இந்த இடைத்தேர்தல்களில் தோல்வியடைந்துள்ளது.இனிமேல் எதிர்க்கட்சிகள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து கேள்விகளை எழுப்பாது என்று அவர்கள் கூறுவார்கள்.பொதுமக்களை ஏமாற்றுவதற்காகவே இந்த இடைத்தேர்தல்களில் வேண்டுமென்றே தோற்றுள்ளனர்
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
அவர்களுடைய ஆட்சிக்கு பாதிப்பு இல்லாத நேரங்களில் தேர்தலை முறையாக நடத்துவது மற்ற நேரங்களில் முறைகேடு செய்து வெற்றி பெறுகிறது பாஜக அரசு என்று பல ஆண்டுகளாக பல்வேறு சமுதாய ஆர்வலர்கள்,மோடி அரசு மீது இந்தக் குற்றச்சாட்டைச் சொல்லிவருகிறார்கள்.
இப்போது அந்தக் கருத்தை முன்னாள் முதலமைச்சரும் சமாஜ்வாடி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவ் வெளிப்படையாகச் சொல்லியிருப்பது ஒன்றியம் முழுதும் பெரும் கவனம் ஈர்த்துள்ளது.


