இந்திய மட்டைப்பந்து அணியின் முன்னாள் தலைவர் தோனி தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்று ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடி வருகிறார். இதற்காக ரெய்னா, பியூஷ் சாவ்லா, கேதர் ஜாதவ் உள்ளிட்டோருடன் சென்னை வந்துள்ள அவர் நேற்று நடந்த பயிற்சியிலும் கலந்து கொண்டார்.
இந்நிலையில், திடீரென தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தோனி காணொலி ஒன்றைப் பகிர்ந்தார். அதில், “இதுவரை உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி. மாலை 7.29 மணியிலிருந்து நான் ஓய்வுபெறுவதாகக் கொள்ளுங்கள்” என்று பதிவிட்டுள்ளார். அந்தக் காணொலியில், அவர் இந்திய அணியில் ஆடிய முதல் ஆட்டத்திலிருந்து பல நினைவுகளின் தொகுப்புகள் இடம் பெற்றுள்ளன.
தோனியின் திடீர் அறிவிப்பு அவரது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
தோனியின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து சுரேஷ் ரெய்னாவும் ஓய்வை அறிவித்தார்.
தோனியின் ஓய்வு அறிவிப்புக்கு அரசியல் தலைவர்கள் முதல் சச்சின் தெண்டுல்கர் தொடங்கி பல்வேறு விளையாட்டு வீரர்களும் வேதனையும் பாராட்டுகளும் தெரிவித்துவருகிறார்கள்.
இது தோனியின் திடீர் ஓய்வு குறித்து சமூகவலைதளங்களில் பரவும் கருத்து…….
ஜார்க்கண்ட் மாநிலத்தில் தேர்தல் தோல்விக்கு தோனி பாஜகவிற்கு ஒத்துழைக்காததே காரணம் என்று அக்கட்சி அவரைப் பழி வாங்கியது. இதற்கு உடந்தையாக இருந்தது கங்குலி. கங்குலியும் காம்பீரும் பீல்டிங் சொதப்பல் என்று வாரியக் கூட்டத்தில் தோனி சொன்னதால் இருவரும் ஓரம் கட்டப்பட்டனர். பீஹார் சட்டசபை தேர்தலிலும் தோனியை அணுகி பிரசாரம் செய்ய அழைத்தார்கள். தோனி கிரிக்கெட் ஆடும் வரை பாஜகவிற்கு பிரசாரம் செய்யவில்லை.
பிரசாந்த் பூஷண் மிரட்டப்படுகிறார். சஞ்சீவ் பட் சிறையில் உள்ளார். கோகா சாட்டார்ஜி தனது உயிருக்கு ஆபத்து என்று கூறுகிறார். கஃபீல் கான் சிறையில் வாடுகிறார்.
இந்த நிலையில் தோனி எடுத்த முடிவினால் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
கொலை அச்சுறுத்தல் என்று இந்துத்துவா அடித்தளத்தை வைத்துள்ளது.
இவ்வாறு சமூகவலைதளங்களில் சொல்லப்படுகிறது.