உள்ளாட்சித் தேர்தலில் தனுஷ் கட்சி போட்டி?

நடிகர் விஜய் முதல்​வ​ரானதை தொடர்ந்து, நடிகர் தனுஷும் அரசி​யலில் ஆர்​வம் காட்டி வரு​கிறார்.அண்மையில்
கோவை​யில் நடை​பெற்ற கூட்​டத்​தில், அகில இந்​திய தனுஷ் இரசிகர் மன்​றம் என்ற அமைப்​பின் பெயர் ‘தனுஷ் நற்​பணி இயக்​கம்’ என மாற்​றப்​பட்​டது.புதிய இலச்சினை மற்றும் கொடியும் அறி​முகம் செய்​யப்​பட்​டன.
இதற்​கிடையே,தில்​லிக்குச் சென்ற தனுஷ், அங்கு பாஜக தலை​வர்​கள் சிலரை சந்​தித்​துப் பேசிய​தாகவும்,‘தமிழக எழுச்​சிக் கழகம்’ என்ற பெயரில் புதிய கட்சி தொடங்​கத் திட்​ட​மிட்​டுள்​ள​தாகவும் தகவல்​கள் வெளியாகின.

இந்​நிலை​யில்,சென்னை பழைய மகாபலிபுரம் சாலை​யில் உள்ள செம்​மஞ்​சேரி தனியார் கல்​லூரி​யில் தனுஷ்
நற்​பணி இயக்​கத்​தின் மகளிர் அணி நிர்​வாகி​கள் சந்​திப்பு நிகழ்ச்சி நேற்று நடை​பெற்​றது.

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட,தனுஷை வரவேற்று கல்​லூரி வளாகம் முழு​வதும் வண்​ணமய​மான வரவேற்புப் பதாகைகள்,வெட்டுருக்​கள் வைக்​கப்​பட்​டிருந்​தன.‘பெண்​களின் குரல் உயர்ந்​தால்​தான் சமூகத்​தின் எதிர்​காலமும் உயரும்’,‘எங்​கள் அன்​பின் அண்​ணன் தனுஷ்,எங்​கள் தலை​வரே’ என்​பது போன்ற வாசகங்​கள் அவற்றில் இடம்​பெற்​றிருந்​தன.

தமிழகம் முழு​வதும் இருந்து 5,000-க்​கும் மேற்​பட்ட பெண்​கள் இதில் பங்​கேற்​றதாகக் கூறப்​படு​கிறது.நிகழ்வில் கலந்துகொண்டவர்களுக்கு கோழி பிரியாணி மதிய விருந்தாக அளிக்​கப்​பட்​டது.அனைவருக்​கும் ஒரு வெள்ளி காமாட்சி விளக்​கும் பரிசாக வழங்​கப்​பட்​டது.

வேட்டி, சட்டை அணிந்து நிகழ்ச்​சி​யில் பங்​கேற்ற தனுஷ்,வந்திருந்த பெண்​களைச் சந்​தித்து கலந்​துரையாடினார்.அனைவரிடமும் தனித்தனியாகப் பேசியதுடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டாராம்.அனைவரை​யும் சந்​தித்​ததில் மகிழ்ச்சி.அனைவரும் நன்கு படித்து வாழ்க்​கை​யில் வெற்றி பெறவேண்​டும் என்று மாணவர்களுக்கும் அறிவுறுத்தினார்.நிகழ்ச்​சி​யின்​போது ஒரு பாடலும் பாடியுள்​ளார்.

இதைத் தொடர்ந்து,2031 தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட அவர் தயாராகிவருகிறார் என்று சொல்லிக்கொண்டிருந்தவர்கள் எல்லாம்,அவர் இன்னும் ஆறு மாதங்களில் வரவிருக்கிற உள்ளாட்சித் தேர்தலிலேயே போட்டியிடவிருக்கிறார்.அதனால்தான் இரசிகர்மன்றத்தை நற்பணி மன்றம் என மாற்றி அதன்முலம் பல சந்திப்புகளை நடத்தத் தொடங்கியிருக்கிறார் என்கிறார்கள்.

Leave a Response