சுங்கச்சாவடியை உடைத்து நொறுக்கிய வேல்முருகனுக்குப் பெரும் வரவேற்பு

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து முதல் கட்டமாக தமிழகத்தில் உள்ள அனைத்து 43 சுங்கச் சாவடிகளிலும் சுங்கவரி தர மறுக்கும் போராட்டம் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் 01.04.2018 காலை 11.00மணி முதல் நடைபெற்றது.

சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள உளுந்தூர் பேட்டை சுங்கச் சாவடியில் கட்சியின் தலைவர் வேல்முருகன் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.

அப்போது கட்சித்தொண்டர்கள் உணர்ச்சி மேலீட்டின் காரணமாக சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கினர். இதில் அங்கிருந்த பல கணினிகள் உடைந்து போயின.

இதுபோலவே தமிழகத்த்லுள்ள இன்னும் சில சுங்கச்சாவடிகளிலும் நடந்துள்ளது.

வேல்முருகனின் இந்தப்போராட்டத்துக்குத் தமிழகம் முழுதும் பெரும் ஆதரவு கிடைத்திருக்கிறது. சமூக வலைதளங்களில் அவருடைய போராட்ட வடிவத்துக்கு நிறைய வரவேற்புகள்.

சுங்கச்சாவடிகளால் வெகுமக்கள் எவ்வளவு பாதிப்புக்கும் வெறுப்புக்கும் ஆளாகியிருக்கிறார்கள் என்பது இதன்மூலம் தெரிகிறது.

காவிரி , ஸ்டெர்லைட், நியூட்ரினோ என்று திரும்புகிற பக்கமேல்லாம் தமிழகத்துக்கு மத்திய அரசாங்கத்தால் சோதனைகள் என்பதால் தமிழகம் முழுமையாக மத்திய அரசுக்கு எதிரான் மனநிலையில் இருக்கிரது எனப்து, வேல்முருகனுக்குக் கிடைக்கும் வரவேற்பிலிருந்து புரிந்துகொள்ள முடிகிறது.

மோடி புரிந்து கொள்வாரா?

Leave a Response