கமலின் ரயில் பயணத்துக்குக் கடும் எதிர்ப்பு

நடிகரும் ,மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமலஹாசன்ரயில் சந்திப்பிற்கு தான் ரசிகர்களை அழைத்துள்ளார்.

ஏப்ரல் மூன்றாம் தேதி எழம்பூர் ஸ்டேசனில் இன்ன நேரத்திற்கு புறப்படுகிறேன்.இது இன்னின ஸ்டேசன்களில் இந்திந்த நேரத்திற்கு வருகிறது…எனத் துல்லியமாக நேரம் குறித்து பத்திரிகைகளில் அழைப்பு விடுத்துள்ளார்.

இதைவிட பொது நலத்திற்கு குந்தகமாக ஏதேனும் செய்ய முடியுமா?

இதை முதன் முதலாக மூத்த பத்திரிக்கையாளர் திருஞானம் தான் கவனப்படுத்தினார்தென்னக .ரயில்வே பொது மேலாளர் கவனத்திற்கு இன்று இதை பத்திரிகையாளர்களாகிய நானும்[சாவித்திரி கண்ணன்],ஜாபர் அலியும்,சமூக ஆர்வலர் கிருஷ்ண மூர்த்தியும் கொண்டு போனோம்.

தென்னக ரயில்வே மக்கள் தொடர்பு அதிகாரி தனஞ்செயன்அவர்களைப் பார்த்தும் ஒரு மனு கொடுத்தோம்.

கமலஹாசன் அனைவரையும் போல ரயிலில் பயணிக்க கூடாது என நாம் கூறவில்லை.ஆனால் பயணிக்கும் ரயிலை ஒரு போதுய் மேடையாகவும்,ரயில்வே பிளாட்பாரத்தை அரசியல் பிரச்சார மைதானமாகவும் பயன்படுத்த அவரை அனுமதிக்க போகிறார்களா? என்பதே கேள்வி.

இதனால் ஏற்படும் பெரும் கூட்டநெரிசலில் ரயிலில் ஏறமுடியாமல் தவறவிடப் போகிறவர்கள் எத்தனை பேரோ?காலதாமதப்படும் ரயில்கள் எத்தனையோ?நடிகர் ஷாருகான் இது போன்ற ஒரு ரயில் சந்திப்பு செய்த போது இரு உயிர்கள் பலியானதை பாடமாக எடுத்து கொள்ள வேண்டாமா?ரயில்வே என்ன செய்யப் போகிறது?பார்ப்போம்.

– சாவித்திரி கண்ணன்

Leave a Response