தமிழக அரசு மீது ரஜினி கடும் விமர்சனம்

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகக் கடந்த 47 நாட்களாகத் தூத்துக்குடி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பல தலைவர்களும் அவர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்து வருகின்றனர்.

நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், நாளை தூத்துக்குடி மக்களுடன் போராட்டத்தில் கலந்து கொள்கிறார்.

இந்நிலையில், அவர்களுக்கு ஆதரவாக ரஜினியும் குரல் கொடுத்துள்ளார்.

ஸ்டெர்லைட் தொழிற்சாலையால் மக்கள் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டிருக்கிறோம் என்று 47 நாட்களாக அவதிப்பட்டு போராடிக் கொண்டிருக்கும்போது, தொழிற்சாலை நடத்த அனுமதி கொடுத்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது புரியாத புதிராக உள்ளது

இவ்வாறு தெரிவித்துள்ளார் ரஜினிகாந்த்.

Leave a Response