காவிரி விசயத்தில் அதிமுக போராட்டம் நடத்த இதுதான் காரணம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவேண்டும் என்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பைச் செயல்படுத்த வேண்டிய மத்திய அரசு, அதைச் செய்யாமல் காலம் கடத்திவிட்டது.

அதோடு நில்லாமல், மேலும் அதைத் தாமதம் செய்யும் விதமாக, உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில் உள்ள ஒரு சொல்லுக்கு விளக்கம் கேட்டு புதிய மனு தாக்கல் செய்யவுள்ளதாகச் சொல்லப்படுகிறது.

காவிரிச் சிக்கலில் வெளிப்படையாகவே பாஜகவும் மோடியும் தமிழகத்துக்கு இரண்டகம் செய்கிறார்கள்.

கர்நாடகத்தில் மே 12 ஆம் தேதி தேர்தல் நடக்கவிருப்பதால், பாஜக இப்படிச் செய்கிறது.

தமிழகத்தில் பாஜகவின் துணை அமைப்பாகச் செயல்படுகிற இபிஎஸ் அணி எப்படி பாஜக்வுக்கு எதிராகப் போராட்டம் நடட்த்ஹுகிறது? என்பது பலரின் கேள்வி.

எடப்பாடி தலைமையிலான தமிழக அரசு, தமிழகத்தில் மட்டுமின்றி கர்நாடகத்திலும் பாஜகவுக்கு முட்டுக் கொடுக்கும் விதமாகவே போராட்டம் நடத்துகிறது.

அதிமுக பாராளுமன்ற உறுப்பினர்கள் போராட்டம், அதிமுகவின் சட்டப்போராட்டம் ஆகியன
பாஜகவைக் குற்றம் சாட்டும் விதமாக வெளிப்படையாக நடக்கிற அதே நேரத்தில் கர்நாடகத்தில், நாங்கள் காவிரி விசயத்தில் முழுக்க முழுக்க கர்நாடகாவுக்கு ஆதரவாகவே செயல்படுகிறோம் அதனால்தான் தமிழக அரசே எங்களுக்கு எதிராக வழக்குத் தொடுத்துள்ளது. ஆனாலும் அதுபற்றிக் கவலைப்படாமல் நாங்கள் கர்நாடக நலனை முன்னிறுத்துகிறோம் எனவே கர்நாடக ஆட்சிப் பொறுப்பை எங்களிடம் கொடுங்கள் என்று பரப்புரை செய்கிறதாம்.

பாஜக கர்நாடகத்தில் ஆட்சியைப் பிடிக்க வேண்டுமென்பதற்காக தமிழக வாழ்வாதாரத்தையே முடக்கக்கூடிய ஒரு விசயத்தில் பாஜகவுக்கு ஆதரவாகச் செயல்படுகிறது தமிழக அரசு. வெட்கம், வேதனை.

Leave a Response