காவிரி மேலாண்மை வாரியம் – கமல் ரஜினியின் கருத்து

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் விதித்த 6 வார கால அவகாசம் மார்ச் 29,2018 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. ஆனால் இதுவரை மேலாண்மை வாரியம் அமைக்கப்படவில்லை.

கர்நாடக சட்டமன்ற தேர்தல் வரும் மே 12ம் தேதி நடைபெற இருக்கிறது. அதை கருத்தில்கொண்டே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் மத்திய அரசு ஏமாற்றுவதாக தமிழக அரசியல் கட்சியினரும் விவசாயிகளும் குற்றம்சாட்டுகின்றனர்.

இந்த நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் டுவிட்டரில் கூறி இருப்பதாவது…

காவிரி விஷயத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது ஒன்று மட்டுமே நாம் ஏற்றுக்கொள்ளக்கூடிய நியாயமான தீர்வாக இருக்க முடியும். என்று கூறி உள்ளார்.

காவிரி தொடர்பாக, நடிகர் கமல்ஹாசன் கூறியிருப்பதாவது….

காவிரி விவகாரத்தில் அரசியல் வேண்டாம்; காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்த வேண்டும். 2 மாநிலங்களுக்கும் தண்ணீர் தேவை, அதற்காக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும்

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது கடினமான பணி அல்ல, மத்திய அரசு நினைத்தால் அமைக்கலாம். காவிரிக்காக தற்கொலை செய்துகொள்வேன் என்பது அரசியல் பித்தலாட்டம்.

காவிரி விவகாரத்தில் அ.தி.மு.க எம்.பி.க்கள் ராஜினாமா செய்தால் வரவேற்கிறேன். பாராட்டுகிறேன்.காவிரி விவகாரத்தில், ஓட்டு வேட்டைக்காக அரசியல் செய்ய வேண்டாம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Response