இவர் என்ன தலைவர்? – சர்ச்சையில் சிக்கிய கமல்

ஏப்ரல் 4 ஆம் தேதி திருச்சியில் நடக்கவிருக்கும் கூட்டத்துக்காக, சென்னை எழும்பூரிலிருந்து தொடர்வண்டிப் பயணம் மேற்கொள்கிறார் நடிகர் கமல்.

செல்லும் வழியில் உள்ள தொடர்வண்டி நிலையங்களில் ரசிகர்களைச் சந்திக்கத் திட்டமிட்டிருந்தார்.இத்னால் பொதுமக்களுக்குப் பாதிப்பு ஏற்படும் என்று எதிர்ப்பு எழுந்தது.

உடனே அத்திட்டத்தைக் கைவிட்டார் கமல். இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்தியில்,

மக்களுடன் நான் கலக்கவிருந்த பயணத்தை அரசியலாக்குகிறார்கள் . அதற்கு ரயில் மேடையல்ல என்பதை நாமறிவோம். மக்கள் நலனை மய்யமாகக் கொண்ட கட்சி இது. ரயில் நிலையங்களில் பயணிகளுக்கும் மக்களுக்கும் இடையூறின்றி செய்து விடுவோம் திருச்சியில் சந்திப்போம். நாளை நமதே

என்று குறிப்பிட்டுள்ளார்.

அவருடைய இந்த முடிவுக்கு ஆதரவும் எதிர்ப்பும் கலந்து வருகின்றன.

பொதுமக்களுக்கு இடையூறு வரும் என்று சொன்னவுடன் முடிவை மாற்றிக் கொண்ட நல்லவர் என்ற பாராட்டும்,

பொதுமக்களுக்கு இடையூறு வரும் எனும் சாதாரண விசயத்தையே இன்னொருவர் சொல்லித்தான் தெரிந்துகொள்ள வேண்டுமென்றால் இவர் என்ன தலைவர்? என்கிற விமர்சனங்களும் வருகின்றன.

Leave a Response