தமிழருவி ஒரு புல்லுருவி – இணையத்தில் வலுக்கும் எதிர்ப்பு

வேலூர் மாவட்டம் சோளிங்கரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் கலந்து கொண்டார். பின்னர் அவர், வேலூர் மாவட்ட ரஜினி ரசிகர்மன்ற மாவட்ட தலைவர் ரவி வீட்டிற்கு சென்று, ரசிகர்களுடன் ஆலோசணை நடத்தினார்.

அப்போது தமிழருவி மணியன், எல்லா இடங்களிலும் பூத் கமிட்டி அமைக்க வேண்டும். ஒவ்வொரு ரஜினி ரசிகரையும் ஒன்றிணைக்க வேண்டும் என்று ரசிகர்களுக்கு ஆலோசனை கூறினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

திறமையான, தகுதிமிக்க, நல்லொழுக்கமுள்ளவர்களை பொறுப்பில் அமர்த்தி அவர்கள் சிறப்பாக செயல்படுகிறார்களா? என்பதை கண்காணிக்கும் கண்காணிப்பாளனாக நான் இருப்பேன் என நடிகர் ரஜினிகாந்த் கூறியதுபோல் வேறு யாராவது கூறியுள்ளார்களா? ஜெயலலிதா இருந்த வரையில் வாயே திறக்காத அமைச்சர்கள் இன்று திசைகள் தோறும் திருவாய் திறக்கிறார்கள்.

3 மாதங்களில் ஆட்சி கவிழும் என்று தினகரன் கூறி வருகிறார். எந்த அடிப்படையில் கூறுகிறார் என்று தெரியவில்லை. அ.தி.மு.க.வினர் அனைவருக்கும் என்ன லட்சியம் உள்ளது?. அவர்களுடைய நோக்கம் ஒன்று தான் எப்படியாவது பதவிக்கு வர வேண்டும்.

பெற்ற பதவியை வைத்து பணம் சேர்ப்பது, பணத்தை வைத்து தேர்தலில் பணம் கொடுத்து மீண்டும் பதவியை பெறுவது மட்டுமே இவர்களின் நோக்கம். நடிகர் ரஜினிகாந்த் முற்றிலும் மாறுப்பட்ட ஆன்மிக அரசியலையும், காமராஜர் ஆட்சியையும் கொடுப்பார்.

இவ்வாறு அவர் கூறினார்.

இவருடைய இந்தக் கருத்துக்குப் பெரும் எதிர்ப்புக் கிளம்பியிருக்கிறது.

சமூகவலைதளங்களில் தென்படும் எதிர்க்கருத்துகளில் சில…

காமராசர் ஆட்சியை ரஜினிகாந்த் கொடுப்பார் என்று தமிழருவி மணியன் சொல்வதன் மூலம், இதை விட பெருந்தலைவரை யாரும் கேவலப்படுத்திட முடியாது.
விரக்தியின் உச்சத்தில் இருக்கிறார் தமிழருவி மணியன் – வன்னிஅரசு

நடிகர் ரஜினியை தமிழ்மண்ணை ஆள அழைப்பதின் மூலம் ஐயா தமிழருவிமணியன் தமிழினத்துக்கு துரோகம் செய்கிறார்.
– இயக்குநர் வ.கௌதமன்

ரஜினியை ஆதரிப்பதன் மூலம் தமிழருவி ஒரு புல்லுருவி ஆகிவிட்டார் – தமிழ்பிரபாகரன்

Leave a Response